விஜய் தலைமையில் நடந்த போராட்டம்.. தவெகவினர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி!

TVK Protest : சென்னை சிவானந்தா சாலையில் 2025 ஜூலை 13ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சாலையின் தடுப்புகள் சேதம் அடைந்துள்ளன. பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக தவெக தொண்டர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜய் தலைமையில் நடந்த போராட்டம்.. தவெகவினர் மீது  வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி!

தவெக போராட்டம்

Updated On: 

15 Jul 2025 08:18 AM

சென்னை, ஜூலை 15 : சென்னை சிவானந்தா சாலையில் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம் (TVK Protest) நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் (Tamilaga Vettri Kazhagam) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது சொத்தை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்து செய்துள்ளனர். முன்னதாக, சிவானந்தா சாலையில் தடுப்புகள் சேதம் அடைந்ததால், அதை சரி செய்ய கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்ட்டு இருந்தது. இந்த நிலையில், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக திருவல்லிகேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் நடந்த சந்தேகத்துக்குரிய மரணங்களை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2025 ஜூலை 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் (TVK Chief Vijay) கலந்து கொண்டார்.

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த லாக் அப் மரணங்களை கண்டித்து விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சிவானந்தா சாலையில் நடந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழக வெற்றிக் கழக தொணர்கள் கலந்து கொண்டனர். இதனால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பேசினார். அப்போது, அவரது பேச்சை கேட்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். விஜய்யை பார்க்க ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். அப்போது, சிவானந்தா சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Also Read : 24 குடும்பங்களிடமும் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்

தவெகவினர் மீது வழக்குப்பதிவு

மேலும், விஜயை பார்ப்பதற்காக சிவானந்தா சாலையின் நடுவில் போடப்பட்ட தடுப்பு கம்பிகள் மீது தொண்டர்கள் ஏறியதாக தெரிகிறது. இதனால், சாலையின் நடுவே தடுப்புகள் அனைத்து சேதம் அடைந்தன. இது சம்பந்தமான வீடியோக்களும் வெளியாகி விமர்சனங்களை தூண்டியது. விஜயை கடுமையாக பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   அதாவது, சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை சேதப்படுத்தியதற்காக பொது சொத்தை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக, சேதம் அடைந்த சாலை தடுப்புகளை சரி செய்து தருவதாகவும், இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

Also Read : போராட்டத்தின்போது சாலையின் தடுப்புகள் சேதம் – சரிசெய்ய அனுமதி கேட்டு தவெக கடிதம்!

தவெக மாவட்ட செயலாளர் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில், போராட்டத்தின்போது, பொது சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே, தாங்களே அதை சரி செய்து தருகிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான், இந்த விவகாரத்தில் தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.