விஜயின் பிரச்சார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.. கரூர் போலீஸ் அதிரடி

TVK Rally Stampede Case : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை பேருந்து ஒட்டுநர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், கரூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விஜயின் பிரச்சார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.. கரூர் போலீஸ் அதிரடி

தவெக பரப்புரை வாகனம்

Updated On: 

05 Oct 2025 10:06 AM

 IST

கரூர், அக்டோபர் 05 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தின் ஒட்டுநர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், கரூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டியதாக ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் 20,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசில் சிக்கி 47 பேர் பலியான நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே துயரத்திற்கு ஆளாக்கியது. போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விஜயின் பிரச்சார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர் இவர்களில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கைதான நிலையில், குமார் மற்றும் ஆனந்தை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், சிபிஐ விசாரணை கோரி தவெக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாத என நீதிமன்றம் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Also Read : ‘கரூரில் நடந்தது சதியல்ல.. விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்’ டிடிவி தினகரன் பேச்சு

அதே நேரத்தில், தவெக பரப்புரைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய்க்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, கரூரில் விஜயின் பரப்புரை வாகனம் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் இது மோதியது தொடர்பாக நீதிமன்றம் கருத்து முன் வைத்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் விஜய்யின் வாகனத்தை பறிமுதல் செய்தது ஏன் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

Also Read : அது உண்மையில்ல…. வதந்தி – விஜய் குறித்து வெளியான தகவல் – உள்துறை அமைச்சகம் விளக்கம்

மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு போலீசார் கரணை காட்டுவதை ஏற்க முடியாது என்றும் விபத்து தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா எனவும் நீதிமன்றம் கூறி இருந்தது. இந்த நிலையில் கரூர் வேலாயுதபாளையம் போலீசார் தவெக பரப்புரை வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் விஜய்யின் பரப்பரி வாகனத்தை பறிமுதல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.