தூத்துக்குடியில் போலீசார் தீவிர சோதனை.. மது போதையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர்கள் தப்பி ஓட்டம்!

Bus Drivers Escaped | தூத்துக்குடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், அந்த பேருந்து ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தூத்துக்குடியில் போலீசார் தீவிர சோதனை.. மது போதையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர்கள் தப்பி ஓட்டம்!

சோதனையில் ஈடுபட்ட போலீஸ்

Updated On: 

11 May 2026 23:46 PM

 IST

தூத்துக்குடி, மே 11 : தூத்துக்குடியில் (Tuticorin) இயக்கப்படும் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள் மது குடித்துவிட்டு ஓட்டுகிறார்களா என்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பேருந்து ஓட்டுநர்கள் சிலர், தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூத்துக்குடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் அந்த பேருந்து நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் யாரேனும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனரா என்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க : முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு.. மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு

மது போதையில் பேருந்தை இயக்கியது அம்பலம்

இந்த சோதனையின் ஒரு பகுதியாக போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சில ஓட்டுநர்கள் மது குடித்துவிட்டு பேருந்து ஓட்டுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக மது குடித்திருந்த ஓட்டுநர்களை தொடர்ந்து பேருந்தை இயக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக மதுபோதையில் சிக்கிய ஓட்டுநர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது.. கார் வரை சென்று முதல்வர் விஜய்யை வழி அனுப்பிய வைகோ

பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி

இவ்வாறு ஓட்டுநர்கள் ஓடிவிட்ட நிலையில், பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர். இந்த நிலையில், நடுரோட்டில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை காவல் உதவி ஆய்வாளர் தானே ஓட்டிச் சென்று பேருந்து நிலையத்தில் நிறுத்தினார். அதன் பிறகு வேறு ஓட்டுநர்கள் மூலம் அந்த பேருந்துகளை இயக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி, பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர்கள் மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லையா முதல்வர் விஜய்? நடந்தது இதுதான்!
பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி..
முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏக்கள்.. வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்கள்..
முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு.. மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு..
விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது.. கார் வரை சென்று முதல்வர் விஜய்யை வழி அனுப்பிய வைகோ..
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி