அலறிய பயணிகள்.. பஸ் நடத்துனரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்.. சிவகங்கையில் ஷாக்
Sivaganga Crime News : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேருந்து நடத்துனர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். முன்விரோதம் காரணமாக பேருந்து நடத்துனர் தாக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

மாதிரிப்படம்
26714சிவகங்கை, ஆகஸ்ட் 23 : சிவகங்கையில் பேருந்து நடத்துனர் ஓட ஓட விரட்டி அவரை கும்பல் ஒன்று வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த நடத்துனர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தற்போது இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முன்பகை காரணமாக, இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால், ரவுடிகளை ஒழிக்க தமிழக காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், பலர் மீது என்கவுண்டர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய மகன் தவச்செல்வம் (23). இவர் தனியார் பேருந்து நடத்துனராக வேலை செய்து வருகிறார். மதுரையில் இருந்து இளையான்குடி செல்லும் தனியார் பேருந்தில் அவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி இரவு தவச் செல்வம் வேலையை முடித்துக் கொண்டு மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது, அடையாளம் தெரியாத கும்பல் தவச் செல்வனிடம் முதலில் பேச்சுவார்த்தை கொடுத்தது.
Also Read : பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்… நெல்லையில் பரபரப்பு… அதிர்ச்சி காரணம்
பஸ் நடத்துனர் ஓட ஓட விரட்டிய வெட்டிய கும்பல்
அதன்பிறகு திடீரென அரிவாளை எடுத்து வெட்ட முயன்றது. இதனை அடுத்து, தவச் செல்வம் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது, அந்த கும்பல் அவரை விடாமல் ஓடஓட விரட்டி அரிவாளால் அவரை வெட்டியுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். அந்த கும்பல் தவச் செல்வனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த தவச் செல்வனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது– இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Also Read ; ரூ.30,000-க்கு பெண் சிசுக் கொலை… சிக்கிய மருத்துவர்.. திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்!
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்ய முயன்ற கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைதாகி உள்ளதாக கூறப்படுகிறது. பேருந்து நடத்துனர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.