மீண்டும் பறவைக்காய்ச்சல்.. மனிதர்களுக்கு பரவுமா? சுகாதாரத்துறை சொன்ன முக்கிய விஷயம்!

Bird Flu Can Not Transmit To Humans | தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அச்சம் நிலவி வந்த நிலையில், பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் பறவைக்காய்ச்சல்.. மனிதர்களுக்கு பரவுமா? சுகாதாரத்துறை சொன்ன முக்கிய விஷயம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Mar 2026 07:40 AM

 IST

சென்னை, மார்ச் 22 : பறவை காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு மனிதர்களுக்கு பறவ வாய்ப்பு இல்லை என்று பொது சுகாதாரத்துறை (Public Health) தெரிவித்துள்ளது. சென்னை சிறுவர் பூங்காவில் பறவைகள் மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகள் மர்மமான முறையில் உயிரிழக்க தொடங்கின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பூங்காவில் உள்ள பறவைகளுக்கு, பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிறுவர் பூங்கா பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறியது

இது குறித்து பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது, பறவை காய்ச்சல் பாதிப்பு 99.9 சதவீதம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. காகங்கள், புறாக்கள் அதிக அளவில் இறந்து கிடந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “மிட்டாய் கூட விற்க முடியாத நிலை!” – கடலை மிட்டாய்க்கு வந்த சோதனை

மேலும் பறவைகள் இறந்து கிடந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது என்றும், இது பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நோய் பரவுவதற்கான காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறைச்சி, முட்டைடை நன்கு வேக வைத்து உட்கொள்ள வேண்டும்

இறைச்சி கடைகள் மற்றும் சுற்றுப்புரங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேக வைத்து உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் மத்தியில் பறவை காய்ச்சல் தொடர்பான அச்சம் நிலவி  வந்த நிலையில், பொது சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்