ஊட்டி போறீங்களா?.. மே 1 முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. இதை தெரிஞ்சுகோங்க!

உதகையிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குத் திரும்பும் வாகனங்களுக்கு மிக முக்கியமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். ழக்கமான குன்னூர் - பர்லியார் மலைப்பாதையில் இறங்குவதற்குச் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

ஊட்டி போறீங்களா?.. மே 1 முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. இதை தெரிஞ்சுகோங்க!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

29 Apr 2026 11:07 AM

 IST

மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் மற்றும் கோடை விழாக்கள் தொடங்க உள்ளன. இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சீரான வாகன மாற்றங்களை உறுதி செய்யவும் நீலகிரி மாவட்ட காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் வரும் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, பால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டுமே உதகை நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர வணிகரீதியான கனரக வாகனங்கள் காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை உதகை நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்:

வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நகருக்குள் நுழையவும் வெளியேறவும் பிரத்யேக வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்பவர்கள்: காட்டேரி சந்திப்பிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி கேத்தி, லவ்டேல், மஞ்சின கொரை மற்றும் பார்கின்ஹில் வழியாக உதகை நகருக்குள் நுழைய வேண்டும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர் செல்பவர்கள்:

லவ்டேல் ரயில் நிலையம், மஞ்சனக்குறை, காந்தள் முக்கோணம் மற்றும் பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூருக்குச் செல்லலாம். கூடலூரிலிருந்து உதகை செல்பவர்கள் தலைகுந்தா, மட்டம், புதுமந்து மற்றும் ஸ்டீபன் சர்ச் வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.

உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் திரும்புபவர்கள்: அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும். குன்னூர் – பர்லியார் வழியாகச் செல்ல அனுமதி கிடையாது .

வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அரசுப் பேருந்து வசதி:

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
குன்னூரிலிருந்து வரும் வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
கோத்தகிரியிலிருந்து வரும் வாகனங்கள்: உதகை அரசு கலைக்கல்லூரி தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். கூடலூரிலிருந்து வரும் வாகனங்கள் ஹச்பிஎப் (HPF) கோல் சாலை பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, வாகனங்களை நிறுத்திய பிறகு அங்கிருந்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற முக்கிய சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல அரசு சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

உதகையிலிருந்து வெளியேறும் வாகனங்கள்:

உதகையிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குத் திரும்பும் வாகனங்களுக்கு மிக முக்கியமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். வழக்கமான குன்னூர் – பர்லியார் மலைப்பாதையில் இறங்குவதற்குச் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இது மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவாகும்.

இதையும் படிக்க: பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சுற்றுலாப் பயணிகளுக்கான சில கூடுதல் டிப்ஸ்:

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் (e-Pass) கட்டாயம் என்பதால், பயணத்திற்கு முன்னரே அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை உள்ளதால், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகளைத் தவிர்ப்பது நல்லது. கோடை விழாக்களின் போது தங்கும் விடுதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்வது சிறந்தது.

உள்ளூர் மக்களின் நலன் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Follow Us
Related Stories
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வாக்கு எண்ணிக்கை: லீவ் கிடையாது – காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு
இன்று சீரடி செல்கிறார் விஜய்?.. தேர்தல் முடிவுகளுக்கு முன்பு அடுத்தடுத்த ஆன்மீகப் பயணத்திற்கு திட்டம்..
சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?
தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..