புகையால் சூழ்ந்த சென்னை.. காற்று மாசு 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி..

Chennai Air Pollution: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அந்த பட்டாசுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட புகையினால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னையில் காற்றுமாசு அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையால் சூழ்ந்த சென்னை.. காற்று மாசு 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி..

கோப்பு புகைப்படம்

Published: 

21 Oct 2025 06:40 AM

 IST

சென்னை, அக்டோபர் 21, 2025: சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. தற்போது நிலவும் காற்றின் தரம் என்பது சுவாசிக்க தகுதியற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று, அதாவது 2025 அக்டோபர் 20ஆம் தேதி, தீபாவளி பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தபோது வெளியேறிய புகை மண்டலத்தில் தங்கி விட்டது. இதனால் கடுமையான காற்றுமாசு ஏற்பட்டது.

சென்னையில் காற்றுமாசு அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றை ஒருவர் சுவாசித்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்; அதாவது எளிதில் நுரையீரல் தொற்றுகள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பொளக்கப்போகும் மழை.. எந்த மாவட்டங்களுக்கு அரஞ்சு அலர்ட்? சென்னையில் எப்படி இருக்கும்?

காற்றின் தர அளவுகள் (AQI):

  • 0 முதல் 50 வரை இருந்தால் – சுவாசிக்க ஏதுவான நல்ல காற்று என்று அர்த்தம்.
  • 51 முதல் 100 வரை இருந்தால் – திருப்திகரமானது; எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட வாய்ப்பு.
  • 101 முதல் 200 வரை இருந்தால் – காற்றில் மிதமான மாசு உள்ளது என்பதைக் குறிக்கும்; இதய நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுவிடுவதில் சற்று சிரமம் அனுபவிக்கலாம்.
  • 201 முதல் 300 வரை இருந்தால் – காற்றின் தரம் மோசமானது; இதை சுவாசிப்பதால் உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
  • 301 முதல் 400 வரை இருந்தால் – காற்று மிகவும் மாசடைந்துள்ளது; சுவாசிக்க தகுதி இல்லாத தரம்.
  • 401 முதல் 500 வரை இருந்தால் – காற்றுமாசு கடுமையாக உள்ளது; பொதுமக்களுக்கு தீவிரமான சுகாதார அபாயங்கள் ஏற்படக்கூடும்.

மாசடைந்த தலைநகர்:


இந்த சூழலில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அந்த பட்டாசுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட புகையினால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னையில் காற்றுமாசு அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் – எப்போ தெரியுமா?

சென்னையில் மட்டும் அல்லாமல் வேலூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்றுமாசின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.