பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு.. திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அண்ணாமலை சாடல்..
Tiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபத் தூணில் விளக்கை ஏற்ற முயன்றபோது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் தமிழக அரசு பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
மதுரை, டிசம்பர் 5, 2025: மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபத் தூணில் விளக்கை ஏற்ற முயன்றபோது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. “காவல் காரணங்களால் அனுமதி வழங்க முடியாது” என போலீசார் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 4, 2025 தேதியான நேற்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில் தீபத்தை ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் மறுபடியும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கும் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலைமையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: “தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு”.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு:
இது ஒரு பக்கம் இருக்க, தமிழக அரசு தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திமுக அரசு உயர்நீதிமன்ற உத்தரவையும் முருகப்பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் பின்னணியில், மீண்டும் உச்ச நீதிமன்றம் தரப்பில் அதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டிச. 16 வரை வாக்காளர் பட்டியல்.. உடனே நிரப்பப்பட்ட படிவங்கள் சமர்பிக்க வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் அரசு:
பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அன்றே, இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.
தீபத்தூணில் விளக்கு ஏற்றும் வரலாறு உள்ளது:
இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே . ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில், சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இரு தரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.