2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை.. டிடிவி தினகரனின் அதிரடி ட்விஸ்ட்..

TTV Dinakaran: னியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால் என்ன செய்வது?” என அவர்கள் கேட்டபோது, அதற்கான பதில் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை.. டிடிவி தினகரனின் அதிரடி ட்விஸ்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Jan 2026 09:12 AM

 IST

சென்னை, ஜனவரி 25, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. முக்கியமாக, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் அதிமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (என்டிஏ) இணைந்து சந்திக்க உள்ளது.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள்:

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக, அன்புமணி ராமதாஸின் பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் குறி வைக்கும் 15 தொகுதிகள்..லிஸ்ட் தயார் செய்த கமலஹாசன்..!

அதனைத் தொடர்ந்து, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி அவரிடம் டெல்லி தலைமையிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்:

இதற்கு முன்னதாக, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரண்டு முறை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்காக, பாஜக தேர்தல் பொறுப்பாளர் சென்னை வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்து, ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க: என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை.. மொழிப்போர்த் தியாகிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..

பின்னர், மதுராந்தகத்தில் நடைபெற்ற பாஜக–அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – டிடிவி:

இந்த நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி தலைமையினர் தன்னிடம் தொடர்ந்து பேசி வந்ததாகவும், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. உங்களுக்குள்ளேயே நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால் என்ன செய்வது?” என அவர்கள் கேட்டபோது, அதற்கான பதில் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

மேலும், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. நிச்சயமாக திமுகவை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது. அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இதனையே விரும்புகின்றனர்” எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?