அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை… பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்… முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்!

AIADMK Leader Murder: திண்டுக்கல் மாவட்டத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.

அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை... பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்... முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்!

திண்டுக்கல்லில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை

Published: 

28 Feb 2026 09:43 AM

 IST

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள பெரிய கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தன் (எ) மருதமுத்து. 42 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், அந்தப் பகுதியில் சொந்தமாக செங்கல் சூளை அமைத்து நடத்தி வந்தா. மேலும், அ. தி. மு. க. வில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், முத்தன் (எ) மருதமுத்து சம்பவத்தன்று இரவு பெரிய கோட்டை- வன்னிய பட்டி சாலையில் உள்ள சந்தனவர்தினி ஆற்றுப் பாலத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மருதமுத்துவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது, அந்த கும்பல் தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் மருதமுத்துவை வெட்ட முயன்றது. அப்போது, அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக அ. தி. மு. க. பிரமுகர் முத்தன் அந்தப் பகுதியில் இருந்து ஓட்டம் பிடித்தார். அந்த மர்ம கும்பலும் அவரை விடாமல் விரட்டி சென்றது.

மேலும் படிக்க: தமிழகத்தில் குறையும் மழை.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..

அதிமுக பிரமுகரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்

அப்போது, முத்தனின் நண்பர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களையும் அந்த மர்ம கும்பல் வெட்ட முயற்சித்தது. இதனால், அச்சம் அடைந்த முத்தனின் நண்பர்கள் அங்கிருந்து விலகி சென்றனர். உடனே, அந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அ தி மு க பிரமுகர் முத்தனை சரமாரியாக வெட்டியது. இதில், முத்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க உயிரிழந்தார். முத்தன் நண்பர்கள் அந்த கும்பலை பிடிக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை.

முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்

பின்னர், அந்த கும்பல் வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்தனின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன் விரோதம், பெண்கள் தொடர்பான தகராறு மற்றும் தொழில் போட்டி ஆகியவை காரணமாக முத்தன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஏடிஎம் மூலம் ரேசன் பொருள்களா? இனி கவலையே வேண்டாம்… மத்திய அரசின் பலே திட்டம்!

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..