இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

AIADMK district secretaries meet: திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணியே இன்னும் உறுதி ஆகாத நிலை உள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் தற்போது வரை வாய்திறக்காமல் உள்ளன. இதனால், அக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Updated On: 

31 Dec 2025 08:55 AM

 IST

சென்னை, டிசம்பர் 31: எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ள நிலையில், இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. அதனால், கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம் – பட்டாசுகள் வெடிக்க தடை… என்னென்ன கட்டுப்பாடுகள்?

கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக பலவீனம்:

திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணியே இன்னும் உறுதி ஆகாத நிலை உள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் தற்போது வரை வாய்திறக்காமல் உள்ளன. இதனால், அக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோல் இரு கட்சிகளுமே அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தேமுதிக ஜனவரி 9ம் தேதி தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

பியூஷ் கோயலுடன் நடந்த ஆலோசனை:

முன்னதாக, அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தபோதிலும், தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் எதுவும் பேசவில்லை. ஆனால் இரு தரப்பிலும் சில மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இதற்கிடையே, அண்மையில் சென்னை வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி?

குறிப்பாக, பியூஷ் கோயல் உடனான பேச்சுவார்த்தையின் போது, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று பாஜக திட்டவட்டமாக கூறிய நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் – தமிழக அரசு புதிய சாதனை

பாஜகவுக்கு 40 தொகுதி?

இதன் காரணமாக பியூஷ் கோயல் உடனான அடுத்த சந்திப்பின்போது, கூட்டணி சிக்கலும், தொகுதி உடன்பாடு குறித்தும் சுமூக உடன்பாடு எட்டப்படும் எனத் தெரிகிறது. பாஜக தரப்பில் 50 முதல் 60 தொகுதிகள் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கும் முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. 40 தொகுதிகளை வழங்க அதிமுக சம்மதம் தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?