தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை தொடங்கும் டிக்கெட் முன்பதிவு..
Diwali Ticket Booking: தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை அதாவது ஆகஸ்ட் 17, 2025 முதல் தொடங்கப்படுகிறது. மேலும் தொடர் பண்டிகையொட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
தீபாவளி டிக்கெட் முன்பதிவு: 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை என்பது அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாத காலங்களே உள்ள நிலையில் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். பண்டிகை காலங்கள் விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே துறை தரப்பில் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதிகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலும் பேருந்துகள் அல்லது ரயில் சேவைகளை நாடி உள்ளனர். ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பொழுது போக்குவரத்து நெரிசலை குறைத்து அதிக வசதியுடன் எந்த சிரமமும் இன்றி தங்களது ஊர்களுக்கு செல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு பலரும் ரயிலில் பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை டிக்கெட் முன்பதிவு:
இதனால் பொதுமக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடுவார்கள். இதற்காக நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 17 2025 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
- அக்டோபர் 16 2025 அன்று பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் ஆகஸ்ட் 17 2025 அன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்
- அக்டோபர் 17 2025 அன்று பயணம் மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 18 2025 அன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
- அக்டோபர் 18 2025 அன்று டிக்கெட் முன்பதிவு செய்ய ஆகஸ்ட் 19 2025 அன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்
- அக்டோபர் 20 2025 அன்று பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 21 2025 அன்று முன்பதிவு செய்ய வேண்டும்
- தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக அக்டோபர் 21 2025 அன்று பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 22 2025 அன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்
- அக்டோபர் 22 2025 அன்று பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 23 2025 அன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
மேலும் படிக்க: நெல்லையில் நடக்கும் பாஜக பூத் கமிட்டி மாநாடு.. தமிழகத்திற்கு வருகை தரும் அமித்ஷா..
20 சதவீத கட்டண சலுகை:
தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு சரியாக காலை 8:00 மணி முதல் தொடங்குகிறது. இது அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் முக்கியமாக தொடர் பண்டிகையொட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.