நாட்டின் 79வது சுதந்திர தினம்.. புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி..
Independence Day Rehearsal: வரும் ஆகஸ்ட் 15, 2025 அன்று நாட்டின் 79வது சுதந்திர தினம் கொண்டாட்டப்படும் நிலையில், சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 13, 2025 தேதியான இன்று மூன்றாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறையின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 13, 2025: ஆகஸ்ட் 15 2025 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 13 2025 தேதியான இன்று சென்னையில் இருக்கக்கூடிய புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் டெல்லியில் இருக்கக்கூடிய செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றுவார். அதே போல் நாடு முழுவதிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார்.
சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி:
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் கடந்த வாரம் தொட்டு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி என்பது ஆகஸ்ட் 8 2025 அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி ஆகஸ்ட் 11 2025 அன்று நடைபெற்றது. அந்த வகையில் மூன்றாம் கட்டம் மற்றும் இறுதியான ஒத்திகை நிகழ்ச்சி என்பது ஆகஸ்ட் 13 2025 தேதியான இன்று நடைபெறுகிறது. இதில் முப்படை வீரர்கள் காவல்துறை தீயணைப்பு துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 15 இந்தியாவை போலவே இந்த நாடுகளுக்கும் சுதந்திர தின விழா தான்.. பட்டியல் இதோ!
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றுவது போன்று ஒத்துகை நடைபெற்றது. பின்னர், தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
போக்குவரத்து மாற்றம்:
இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.
- உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை அமையப்பெற்றுள்ள காமராஜர் சாலை. போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை அமைய பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளை அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து அண்ணாசாலை. மன்ரோ சிலை. முத்துசாமி பாலம். முத்துசாமி சாலை. ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
- அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம். முத்துசாமி சாலை. ராஜா அண்ணாமலை மன்றம். வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை அடையலாம்.
- ராஜாஜி சாலையில் வரும் வாகனங்கள். இருந்து 4 தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல. பாரிமுனை. வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road). ராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம். அண்ணாசாலை. மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.