நெருங்கும் 2026 சட்டமனற தேர்தல்.. த.வெ.க உடன் கைக்கோர்க்கும் சசிகலா?

Sasikala To Join TVK: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அரசியல் வல்லுநர்களின் கருத்துப்படி, சசிகலா தமிழக வெற்றி கழகத்துடன் இணைய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நெருங்கும் 2026 சட்டமனற தேர்தல்.. த.வெ.க உடன் கைக்கோர்க்கும் சசிகலா?

கோப்பு புகைப்படம்

Published: 

05 Feb 2026 16:59 PM

 IST

பிப்ரவரி 5, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், அதிமுக மற்றும் திமுகவின் கூட்டணி அமைப்புகள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த சூழலில், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அரசியல் வல்லுநர்களின் கருத்துப்படி, சசிகலா தமிழக வெற்றி கழகத்துடன் இணைய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி:

அதிமுகவைப் பொருத்தவரையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாசன் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, தாமாக (தமிழக மாநில காங்கிரஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி கட்சியிலிருந்தும் நீக்கினார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

த.வெ.கவில் இணைந்த செங்கோட்டையன்:

அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தெளிவாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒருபோதும் சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க மாட்டோம் என தெளிவாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இவர்கள் இருவரும் வேறு வேறு கட்சிகளில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: 2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. டெல்டாவில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட் என்ன?

த.வெ.க உடன் கைக்கோர்க்கும் சசிகலா?

குறிப்பாக, சசிகலாவைப் பொருத்தவரையில் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது செங்கோட்டையன் மூலம் சாத்தியமாகும் எனவும் சொல்லப்படுகிறது. சசிகலாவிடம் முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில், சசிகலா தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தால், அது அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரையில், 2026 சட்டமன்ற தேர்தலே அதன் முதல் தேர்தல் களமாகும். பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தற்போது வரை கூட்டணிக்காக எந்தக் கட்சியும் முன்வரவில்லை. எனவே, அக்கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க பல்வேறு முயற்சிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சசிகலாவும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

Follow Us
Related Stories
‘234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி’.. இன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்!!
பங்குனி உத்திர விழா… பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!
டிசம்பருக்குள் ஹேப்பி நியூஸ்! சூப்பரா மாறப்போகும் சென்னை விமான நிலையம்.. கூட்டத்தை சமாளிக்க செம திட்டம்..
யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!
சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!
சென்னை டூ கேரளம் பருந்து போல பறக்கலாம்.. வருகிறது புல்லட் ரயில் சேவை… திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்பு!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..