பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

9th Standard Class Girl Student Died | தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்த நிலையில், வீட்டு வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

உயிரிழந்த மாணவி

Updated On: 

08 Dec 2025 19:47 PM

 IST

தென்காசி, டிசம்பர் 08 : தென்காசி (Tenkasi) மாவட்டம், உடையம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சங்கரம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்துள்ளனர். இவர்களின்  மகள் கிருஷ்ணவேணி, ஆலங்குளத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவிக்கு இதயம் தொடர்பான சிக்கல் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதற்காக தினமும் மருந்துகளும் எடுத்து வந்துள்ளார்.

பள்ளிக்கு செல்லும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி

இந்த மாணவி இன்று (டிசம்பர் 08, 2025) வழக்கம் போல காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கிளம்பிக்கொண்டு இருந்துள்ளார். அதற்காக சீருடை அணிந்து, புத்த பையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டின் வாசலிலே மாணவி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய அவரது பெற்றோர் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : ரூ. 610 கோடி ரீஃபண்ட்.. 3000 லக்கேஜ் ரிட்டர்ன்… இயல்பு நிலைக்கு திரும்பும் இண்டிகோ!

மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள்

மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மாணவியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பிறகு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!

இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி, பள்ளிக்கு செல்லும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை