பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. இனி ஊருக்கு போறது ஈஸி.. 845 கோடை கால சிறப்பு பேருந்துகள் ரெடி!

Special Buses Announced: தமிழகத்தில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 835 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் எங்கிருந்து, எப்போது இயக்கப்படும் என்ற முழு விவரம் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. இனி ஊருக்கு போறது ஈஸி.. 845 கோடை கால சிறப்பு பேருந்துகள் ரெடி!

கோடை கால சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Published: 

16 Apr 2026 15:16 PM

 IST

தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) முதல் 45 நாள்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்களின் குழந்தைகள் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் படையெடுப்பார்கள். இதேபோல, கோடை விடுமுறையை களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள். அவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சுமார் 835 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் கூறியதாவது: தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து 310 சிறப்பு பேருந்துகள்

இதையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) 295 சிறப்பு பேருந்துகளும், மறுநாள் சனிக்கிழமை ( ஏப்ரல் 18) 310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதே போல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூர், ஓசூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: “காங்கிரஸை பற்றி பேச வேண்டாம்”.. நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடம்.. சீமானுக்கு எச்சரிக்கை!!

திருப்பூர், பெங்களூரில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள்

இதே போல, நாளை மறுநாள் சனிக்கிழமை ( ஏப்ரல் 18) 55 அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல, திருப்பூர், பெங்களூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17 ) மற்றும் ஏப்ரல் 18- ஆம் தேதிகளில் 20 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இயக்கப்படும் கோடை கால பேருந்துகள்

இதே போல, சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை கால சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். இதே போல, நிகழாண்டும் கோடை விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..

Follow Us
Related Stories
அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!
மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!
வீடி தேடி வரும் அரசு திட்டத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்பு.. பல்வேறு அதிரடி வாக்குறுதிகள்… தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
புத்தகங்களை ஓரமா வைங்க.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா.. வெளியான குளு குளு அறிவிப்பு!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி