AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு அமல்… எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம்… முழு விவரம்!

Toll Hike Implemented: தமிழகத்தில் உள்ள 60- க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில், எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு அமல்… எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம்… முழு விவரம்!
தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 01 Apr 2026 08:12 AM IST

தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1- ஆம் தேதி சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 60- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று மார்ச் 31- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில், கார் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல, கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 17 சுங்கச்சாவடிகளில்

சென்னை மாவட்டத்தில் உள்ள 17 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது. இதில், சூரப்பட்டு, பாடியநல்லூர், வானகரம் மற்றும் மதுரை வெளிவட்ட சாலையில் 2 சுங்கச்சாவடிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கறை சுங்கச்சாவடி, மாமல்லபுரம் பகுதியில் உள்ள நாவலூர் சுங்குச்சாவடி என்பன உள்ளிட்ட 17 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!

எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு சுங்க கட்டணம்

இந்த சுங்க சாவடிகளில் கார்கள் மற்றும் சிறிய வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.180- இல் இருந்து ரூ.185- ஆகவும், 3 ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.190- இல் இருந்து ரூ.195- ஆகவும், 4 ஆட்சியில் வாகனங்களுக்கு ரூ.280- இல் இருந்து, ரூ.285- ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதில், சுங்க கட்டணம் ரூ.5 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. போக்குவரத்து இல்லாத வாகனங்கள் சுமார் 200 முறை பயணம் செய்யும் வகையில் ரூ.3000 கட்டணத்தில் வருடாந்திர சுங்க அனுமதி சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரொக்கம் பெறும் முறை முற்றுலும் தடை

இதே போல, இன்று (ஏப்ரல் 1- ஆம் தேதி) புதன்கிழமை முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கம் பெறும் முறை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக முற்றிலும் டிஜிட்டல் மயத்தின் மூலமே பணம் செலுத்த வேண்டும். “பாஸ்ட் ட்ராக்” ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.55 கட்டணத்துக்கு பதில் ரூ.68 ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சரக்கு வாகனங்களின் கட்டணம் அதிகரிப்பதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க: புனித வெள்ளி – வார விடுமுறை… சொந்த ஊர் செல்லலாமா.. 2,257 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

Follow Us