புத்தகங்களை ஓரமா வைங்க.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா.. வெளியான குளு குளு அறிவிப்பு!

Summer Vacation For School: தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை ( ஏப்ரல் 17) முதல் 45 நாள்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புத்தகங்களை ஓரமா வைங்க.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா.. வெளியான குளு குளு அறிவிப்பு!

பள்ளிகளுக்கு 45 நாள்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

Published: 

16 Apr 2026 14:46 PM

 IST

தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுகக்கு கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி ( புதன்கிழமை) முதல் முழு ஆண்டு தேர்வுகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வந்தது. இந்த தேர்வுகள் இன்றுடன் ஏப்ரல் 16 ( வியாழக்கிழமை) முடிவடைந்தது. அதன்படி, மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) முதல் தொடங்குகிறது. இதில், சுமார் 45 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அரசு பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாகவும், வாக்கு எண்ணும் மையங்களாகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, அரசு பள்ளிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதனால், அரசு பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜூன் 1- ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு

மீண்டும் வருகிற ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் வெளிப்புற விளையாட்டுகளில் அதிக அளவு ஈடுபடுவார்கள். அத்துடன் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு அதிகளவு தண்ணீர் அருந்த செய்ய வேண்டும். சூரிய ஒளி தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாணவர்கள் தொப்பிகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க: சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தபால் வாக்குப்பதிவு.. யார் யார் இதை பயன்படுத்தலாம்?

கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுறை

அத்துடன் சூரியன் உச்ச வேளையில் இருக்கும் போது மாணவர்கள் வெளியே செல்வதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு ஆபத்தான பொருட்கள் பார்வைகள் படாதவாறு பெற்றவர்கள் பாதுகாப்பாக வைத்தல் வேண்டும். மேலும், மாணவர்கள் நீர் நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிப்பதற்கு பெற்றோர் அனுமதி வழங்கக் கூடாது. சில மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மனநிலை ஆகியவற்றை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்.

நூலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும்

மேலும், தொலைக்காட்சிகள் மற்றும் செல்போன்கள் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே உள்ள நூலகத்துக்கு அழைத்து சென்று சுமார் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெயில் வாட்டம் உச்சம்… தமிழகத்தில் மழை சான்ஸ் குறைவு!

Follow Us
Related Stories
அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!
மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!
வீடி தேடி வரும் அரசு திட்டத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்பு.. பல்வேறு அதிரடி வாக்குறுதிகள்… தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. இனி ஊருக்கு போறது ஈஸி.. 845 கோடை கால சிறப்பு பேருந்துகள் ரெடி!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி