அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து – 20 பேர் படுகாயம் – என்ன நடந்தது?

Bus Accident at Tiruppur: திருப்பூர் அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்ததில் 20 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து - 20 பேர் படுகாயம் - என்ன நடந்தது?

திருப்பூர் அருகே பேருந்து விபத்தில் 20 பேர் படுகாயம்

Updated On: 

11 Jan 2026 16:20 PM

 IST

திருப்பூர், ஜனவரி 11 : திருப்பூர் (Tiruppur) மாவட்டம் அவினாசி அருகே பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஜனவரி 11, 2025 அன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதியதில் பெரும் விபத்து (Accident) ஏற்பட்டது. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதன் காரணமாக, பின்னால் வந்த பேருந்துகள் ஒன்றின் பின்னொன்று மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பேருந்து விபத்தில் 20 பேர் படுகாயம்

இதில் அந்த பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அவினாசி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : காதல் ஜோடியை வீடு புகுந்து தாக்கிய பெண் வீட்டார்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

விபத்து காரணமாக பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டியில் மினி பஸ் விபத்து

முன்னதாக நீலகிரி மாவட்டம் உதகையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தங்காடு நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : வளர்த்து ஆளாக்கிய சித்தி இறந்ததால் சிறப்பு காவல் ஆய்வாளர் விபரீத முடிவு.. திருவள்ளூரில் சோகம்!!

பேருந்தின் ஸ்டியரிங் திடீரென லாக் ஆனதால் இந்த பேருந்து விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருசிலர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகிறது. இந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதால் மக்கள் இது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களிலேயே தமிழ்நாட்டில்4 பெரிய விபத்துகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!