கஞ்சா பார்ட்டி – பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட 18 பேர் கைது – பரபரப்பு சம்பவம்
Chennai Crime Update: சென்னையில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
சென்னையில் (Chennai) உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து கஞ்சா புகைப்பதாக கிடைத்த புகாரில் காவல்துறையினர் பெண்கள் உட்பட 18 பேரை கைது செய்திருக்கின்றனர். சென்னையில் உள்ள கீழ்பாக்கத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையல் 3 அறைகளில் தங்கி கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 18 பேரை கைது செய்தனர். இதில் பிரபல இசையமைப்பாளரின் மகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இசையமைப்பாளரின் மகள் உட்பட 18 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் அரை கிராம் கஞ்சா மற்றும் 18 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த அக்டோபர் 5, 2025 அன்று அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்டவை பயன்படுத்தியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இந்த ஹோட்டலில் தங்கியிருப்பது வந்துதெரியவந்திருக்கிறது. அதில் ஆனந்தபுரத்து வீடு படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் கிருஷ்ணாவின் மகளும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதையும் படிக்க : சென்னையில் மொட்டை மாடியில் செல்போன் பேசிய இளைஞர் – இடி தாக்கி பலி – என்ன நடந்தது?
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் எழும்பூர் உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 7, 2025 அன்று ஆஜர்படுத்தப்ட்டனர். இதனையடுத்து அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடரபான வழக்கு கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அவர்களுக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்தவர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு
இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலையை அளிக்கிறது. சமீபத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் மேலும் ஒரு இசைமைப்பாளரின் மகள் கைது செய்யப்பட்டிருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : தீபவாளிக்கு மக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எப்படி முன்பதிவு செய்வது? விவரம் இதோ
இதனையடுத்து போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பலரும் இதில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் ஆபத்து இருப்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர.