பிப்ரவரி 13 வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களின் கடும் பனி மூட்டம் நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

Heavy Fog In Chennai For Next Few Days | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 13, 2026 வரை 14 மாவட்டங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 13 வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களின் கடும் பனி மூட்டம் நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Feb 2026 06:49 AM

 IST

சென்னை, பிப்ரவரி 10 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (பிப்ரவரி 10, 2026) முதல் பிப்ரவரி 13, 2026 வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மொத்தம் 14 மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இவ்வாறு கூறியுள்ளது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் பனி மூட்டம் தொடரும் – வானிலை மையம்

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (பிப்ரவரி 10, 2026) முதல் பிப்ரவரி 15, 2026 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 13, 2026 முதல் பிப்ரவரி 13, 2026 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மிதமான பனி மூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விசாரணைக்கு சென்ற போலீசாரை கடுமையாக தாக்கிய இளைஞர்கள் – 5 பேர் கைது – பரபரப்பு தகவல்

அதிகாலையில் லேசான பனி மூட்டம் நிலவும்

இதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனி மூட்டம் நிலவும். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 10, 2026 அன்று காலை வானம் தெளிவாக இருக்கும் என்றும் அதன் பிறகு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை.. உலக முதலீடுகளுடன் போட்டியிடும் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அதிகாலை நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான பனிப்பொழிவு நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Stories
கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!
சென்னையில் ரூ.70.37 கோடியில் புதிய நடைபாதைகள்…6 மண்டலங்களில் அமைக்கப்படுகிறது..எங்கெல்லாம் தெரியுமா!
மகாபலிபுரம்-கொடைக்கானலில் ரோப் கார் சேவை…மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!
சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்.. 2 ஆம் கட்ட பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத்-ரமலான் பண்டிகையில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி…உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்