Yashasvi Jaiswal: ஊக்கமருந்து சோதனையை மேற்கொள்ளாத ஜெய்ஸ்வால்.. நோட்டீஸ் அனுப்பிய NADA! விளையாட தடையா?

National Anti-Doping Agency of India: யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் இருந்து தங்களை விளக்கிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 மாத காலத்திற்குள் 3 சோதனைகளை தவறவிடும் ஒரு வீரர், ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீரர் இரண்டு ஆண்டுகள் தடையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

Yashasvi Jaiswal: ஊக்கமருந்து சோதனையை மேற்கொள்ளாத ஜெய்ஸ்வால்.. நோட்டீஸ் அனுப்பிய NADA! விளையாட தடையா?

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷபாலி வர்மா

Published: 

09 May 2026 15:05 PM

 IST

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை ஊக்கமருந்து சோதனைகளை மேற்கொள்ளத் தவறியதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வீரர், வீராங்கனை வேறு யாருமல்ல யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷஃபாலி வர்மா ஆவர். யஷஸ்வி தற்போது ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிக்காக விளையாடி வருகிறார். ஷஃபாலி வர்மா தற்போது தென்னாப்பிரிக்காவில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் பங்கேற்க சென்றுள்ளார். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை, இவ்விரு பிளேயர்களின் சோதனைகளையும் தவறவிட்டதாகப் பதிவு செய்துள்ளது. இதன் பொருள், யஷஸ்வி மற்றும் ஷஃபாலி சோதனைக்காக நியமிக்கப்பட்ட இடத்திற்கு ஆஜராகத் தவறியுள்ளனர் என்பதாகும்.

ALSO READ: ராஜஸ்தானை எதிர்கொள்ளும் குஜராத்.. போட்டி யாருக்கு சாதகம்..?

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் இருந்து தங்களை விளக்கிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 மாத காலத்திற்குள் 3 சோதனைகளை தவறவிடும் ஒரு வீரர், ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீரர் இரண்டு ஆண்டுகள் தடையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

பதிவுசெய்யப்பட்ட சோதனைக் குழுவில் (RTP) சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள், ஊக்கமருந்து சோதனைக்கான நேரத்தையும் இடத்தையும் பதிவு செய்ய வேண்டும். ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர், மாதிரிகளைச் சேகரிப்பதற்காகக் குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்திற்கு வருவார். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஊக்கமருந்து சோதனை மாதிரியைச் சேகரிக்க அதிகாரி வந்தபோது, ​​அவர் வரவில்லை என்று அறிக்கையில் நாடா (NADA) தெரிவித்திருந்தது. இதேபோல், ஷெஃபாலி வர்மாவின் மாதிரி கடந்த 2025 நவம்பர் 7ம் தேதி சேகரிக்கப்படவிருந்தது. ஆனால் அவரும் வரவில்லை. இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் RTP-யின் (Return to Play) கீழ் வருகின்றனர்.

வீரர்களுக்கு தடை விதிக்கப்படுமா..?

தவறவிட்ட சோதனை பதிவு செய்யப்பட்ட போதிலும், இரு வீரர்களுக்கும் தங்களை விளக்கிக் கொள்ள மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷஃபாலி மற்றும் யஷஸ்வி ஆகியோருக்கு தங்கள் விளக்கத்தை அளிக்க மேலும் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இரு கிரிக்கெட் வீரர்களும் கடந்த 2026 பிப்ரவரி 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, நாடா (NADA) முதல் தவறவிட்ட சோதனையை பதிவு செய்துள்ளது.

ALSO READ: ஐபிஎல்லில் புகை.. ஹோட்டல்களில் விருந்தினருடன் நடை.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

நாடா அமைப்பும் இது குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு தகவல் தெரிவித்துள்ளது. இனி இரு வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், ஷஃபாலி மற்றும் யஷஸ்வி மேலும் இரண்டு சோதனைகளில் பங்கேற்க தவறினால், தடை விதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வார்கள்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி