Dog Bite: உலகளாவிய போட்டியில் இந்தியாவிற்கு சிக்கல்.. நேரு ஸ்டேடியத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கடித்த நாய்!

World Para Athletics Championships 2025: 2025 அக்டோபர் 3ம் தேதியான நேற்று காலை 9 மணியளவில், வீரர்களும் பயிற்சியாளர்களும் தங்கள் பயிற்சி அமர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு தெருநாய்கள் மைதான வளாகத்திற்குள் நுழைந்து ஜப்பான் மற்றும் கென்யாவிலிருந்து வந்த பயிற்சியாளர்களைத் தாக்கியுள்ளது.

Dog Bite: உலகளாவிய போட்டியில் இந்தியாவிற்கு சிக்கல்.. நேரு ஸ்டேடியத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கடித்த நாய்!

நேரு ஸ்டேடியம்

Published: 

04 Oct 2025 13:06 PM

 IST

இந்தியா (India) முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் (World Para Athletics Championships 2025) நேற்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. தெருநாய்கள் மைதானத்திற்குள் நுழைந்து ஜப்பான் மற்றும் கென்யாவிலிருந்து வந்த பயிற்சியாளர்களைத் தாக்கியுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் பீதி ஏற்பட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இரு பயிற்சியாளர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு ஊசிகள் வழங்கப்பட்டன.

என்ன நடந்தது..?

2025 அக்டோபர் 3ம் தேதியான நேற்று காலை 9 மணியளவில், வீரர்களும் பயிற்சியாளர்களும் தங்கள் பயிற்சி அமர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு தெருநாய்கள் மைதான வளாகத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, கென்ய பயிற்சியாளர் டென்னிஸ் மரகியா, கால் ரூம் அருகே தனது வீரருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ​​நாய் திடீரென பின்னால் இருந்து வந்து அவரது காலில் கடித்தது. இதனால், அவருக்கு பயங்கரமாக ரத்தம் கசிந்தது, அருகிலுள்ள பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அவரை நாய் தாக்குதலில் இருந்து மீட்டனர்.

ALSO READ: கோலி மற்றும் ரோஹித் மீண்டும் வருவார்களா? ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!

அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஜப்பானின் மகளிர் பயிற்சியாளர் மெய்கோ ஒகுமட்சுவும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் சிக்கினார். பயிற்சிப் பாதையில் வீரர்களை மெய்கோ மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ​​மற்றொரு நாய் அவரை நெருங்கி காரணமின்றி கடிக்க தொடங்கியது. அப்போது, பாதுகாப்பு ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த 2 கொடூர சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் அரை மணி நேர இடைவெளியில் நடந்துள்ளன. இது வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி ஏற்பாட்டாளர்கள் விளக்கம்:


உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு இந்த சம்பவத்திற்கு உடனடியாக விளக்கம் அளித்தது. அதில், இரு பயிற்சியாளர்களும் உடனடியாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு முதலுதவி பெற்ற பிறகு அவர்கள் பாதுகாப்பாக தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினர். ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. மேலும், தாக்குதல் நடத்திய 2 நாய்களை பிடிக்கும் குழுக்கள் இப்போது மைதானத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 2025 ஆகஸ்ட் 21ம் தேதியே மைதான வளாகத்திலிருந்து நாய்களை அகற்றக் கோரி இந்திய நகராட்சிக்கு (MCD) ஒரு கடிதம் எழுதப்பட்டதாகவும் குழு கூறியது. அந்த நேரத்தில் வளாகத்தில் இருந்து நாய்கள் அகற்றப்பட்டன. ஆனால் நாய்கள் உணவு தேடி மீண்டும் உள்ளே நுழைந்ததாகவும் கூறப்பட்டது.

ALSO READ: வரலாற்றில் இது 4வது முறை மட்டுமே! 18 வருட வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அணி!

டெல்லியில் தெருநாய்களின் பிரச்சனை:

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தெருநாய் தொல்லை தொடர்பான முதல் சம்பவம் இதுவல்ல. உச்ச நீதிமன்றம் கூட இந்த விஷயத்தில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் நிலைமை இன்னும் குறைந்தபாடியில்லை. சர்வதேச நிகழ்வுகளின் போது இதுபோன்ற சம்பவங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல், இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளது.

Related Stories
IND vs AUS: வீரராக ரோஹித் சர்மா! கேப்டனாக இளம் வீரர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
IND vs WI: அசத்தலான பந்து வீச்சு.. சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
IND vs WI 1st Test: வரலாற்றில் இது 4வது முறை மட்டுமே! 18 வருட வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அணி!
India vs Australia: கோலி மற்றும் ரோஹித் மீண்டும் வருவார்களா? ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!
IND vs WI 1st Test: ஒரே நாளில் கே.எல்.ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம்!
Women World Cup Points Table: இந்தியாவை முந்திய வங்கதேசம்.. மகளிர் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா டாப்!