ICC T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியை மாற்றலாமா? ஐசிசி கூறுவது என்ன?

Team India Squad For T20 World Cup 2026: 2026 ஜனவரி 7க்குப் பிறகு இந்திய அணியில் ஏதேனும் மாறம் செய்ய வேண்டும் என்றால், இந்த முடிவை எடுக்க பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை. இதற்காக, ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். காயம் போன்ற கடுமையான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அணியில் மாற்றங்களை செய்ய ஐசிசி அனுமதிக்கும்.

ICC T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியை மாற்றலாமா? ஐசிசி கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

20 Dec 2025 17:35 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பைக்கான (ICC T20 World Cup 2026) இந்திய அணியில் (Indian Cricket Team) யார் விளையாடுவார்கள்? யார் நீக்கப்படுவார்கள்? பலரிடம் இது போன்ற கேள்விகள் இருந்தன. ஆனால் அணி அறிவிக்கப்பட்டவுடன், இதற்கான பதில்கள் கிடைத்தது. இந்திய தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தேர்வின் அடிப்படையில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக அக்சர் படேலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போட்டிக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா? என்ற கேள்விக்கான பதிலை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஆசியக் கோப்பை பைனலில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. வெல்லப்போவது யார்..?

ஐ.சி.சி விதிகள் கூறுவது என்ன..?

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே,  அணிகளை அறிவிக்க வேண்டும். 2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளது. எனவே, 2026 ஜனவரி முதல் வாரத்திற்குள் அணிகள் அறிவிக்கப்பட வேண்டும். அதாவது, உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும் வருகின்ற 2026 ஜனவரி 7ம் தேதிக்குள் தங்கள் அணிகளை அறிவிக்க வேண்டும். ஆனால், அதேநேரத்தில் இந்திய அணி இன்று அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதியே அறிவித்துள்ளது. அதாவது, யாருக்காவது காயம் அல்லது அணியில் மாற்றம் ஏற்பட்டால் ஏதேனும் மாற்றம் நடந்தால், வருகின்ற 2026 ஜனவரி 7ம் தேதி வரை பிசிசிஐ மாற்றங்களைச் செய்து ஐசிசியிடம் தெரிவிக்கலாம்.

2026 ஜனவரி 7 க்குப் பிறகு அணி எப்படி மாறும்?


2026 ஜனவரி 7க்குப் பிறகு இந்திய அணியில் ஏதேனும் மாறம் செய்ய வேண்டும் என்றால், இந்த முடிவை எடுக்க பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை. இதற்காக, ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். காயம் போன்ற கடுமையான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அணியில் மாற்றங்களை செய்ய ஐசிசி அனுமதிக்கும். அதாவது, ஒரு வீரர் கடுமையாக காயமடைந்தால், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இதுதொடர்பாக முழுமையான மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும். அதன் பிறகு, அணி மாற்றப்படும். ஆனால் ஐசிசி மறுத்தால், அணி மாற்றப்படாது.

ALSO READ: கேப்டனாக சூர்யகுமார் யாதவ்.. இல்லாத கில்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங்

Related Stories
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?
India vs Pakistan: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!
T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..