Ban vs WI: 50 ஓவர்களும் சுழற்பந்து வீச்சு! வங்கதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சம்பவம்!

West Indies New Record: வங்கதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி பந்து வீசியது. அதாவது ஒரு வேகப்பந்து வீச்சாளர்களை கூட பயன்படுத்தவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர்களும் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டது இதுவே முதல் முறை.

Ban vs WI: 50 ஓவர்களும் சுழற்பந்து வீச்சு! வங்கதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சம்பவம்!

வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ்

Published: 

22 Oct 2025 08:33 AM

 IST

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh vs West Indies) அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 2025 அக்டோபர் 18ம் தேதி நடந்த முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இரண்டாவது போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. இந்த இரண்டாவது போட்டி டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நேற்று அதாவது 2025 அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி செயல்பட்ட விதத்தில் ஒரு ஆச்சரியம் உள்ளது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களை (Spinners) மட்டுமே பயன்படுத்தி பந்து வீசியது. அதாவது ஒரு வேகப்பந்து வீச்சாளர்களை கூட பயன்படுத்தவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர்களும் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டது இதுவே முதல் முறை.

போட்டியில் நடந்தது என்ன..?


டாஸ் வென்று பேட்டிங் செய்ய வங்கதேசம் தேர்வு செய்தது. ஆடுகளத்தைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளரிடம் கொடுத்தது. அதன் பிறகு, 50 ஓவர்கள் முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 5 பந்து வீச்சாளர்கள் தலா 10 ஓவர்கள் வீசினர். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியை பெற்றது.

இலங்கை சாதனையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ்:

இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையின் சாதனையை முறியடித்தது. ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி மொத்தம் 3 முறை சுழற்பந்து வீச்சாளர்களிடமிருந்து 44 ஓவர்கள் வீசியுள்ளது. 1996ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், 1998ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கும் எதிராகவும், 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கும் எதிராகவும் இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர்களிடமிருந்து 44 ஓவர்கள் வீசியுள்ளது.

சூப்பர் ஓவர் வந்ததும், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. முதல் 5 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது, கடைசி பந்தில் ஷாய் ஹோப் பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரை 10 ஆக உயர்த்தினார். சூப்பர் ஓவர் இறுதி பந்து வரை பரபரப்பாகவே இருந்தது. கடைசி பந்தில் வங்கதேச வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சைஃப் ஹசன் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால், சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.