Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli Missed Milestones: விராட் கோலியின் நிறைவேறாத கனவு இதுதான்! டெஸ்டில் இந்த சாதனைகள் எல்லாம் மிஸ்..!

Virat Kohli Retirement: விராட் கோலி எதிர்பாராத விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 10,000 டெஸ்ட் ரன்கள் என்ற தனது நீண்டகால இலக்கை அடைய 770 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் மற்றும் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் உயர் இடத்தைப் பிடிக்க அவருக்கு வாய்ப்பு இருந்தது. இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் இழந்த வாய்ப்புகள் பற்றி இந்த கட்டுரை ஆராய்கிறது.

Virat Kohli Missed Milestones: விராட் கோலியின் நிறைவேறாத கனவு இதுதான்! டெஸ்டில் இந்த சாதனைகள் எல்லாம் மிஸ்..!
விராட் கோலி Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 May 2025 19:05 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli), யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் (Test Cricket) இருந்து இன்று அதாவது 2025 மே 12ம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விராட் கோலி இனி டெஸ்ட் வடிவத்தில் விளையாட விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், பிசிசிஐ (BCCI) உயர் அதிகாரி அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், விராட் கோலி தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல், இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ஓய்வு முடிவை அறிவித்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் படைக்க நினைத்து தவறவிட்ட சாதனையை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

பல சாதனைகள்:

கடந்த 2011ம் ஆண்டு விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனது முதல் ஒரு வீரராகவும் சரி, கேப்டனாகவும் சரி பல்வேறு சாதனையை படைத்தார். இருக்கும். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் படைக்க நினைத்த ஒரு சாதனை ஓய்வு பெற்றதன்மூலம் தவறவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி கோலி இன்னும் 770 ரன்கள் எடுத்திருந்தால், அவர் தனது கனவை நிறைவேற்றியிருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டுவதே தனது இலக்கு என்று கோலி 12 ஆண்டுகளுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு ஒரு செய்தி சேனல் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அதை முடிக்க முடியவில்லை. கோலி சீக்கிரமே ஓய்வு பெற்று தனது கனவை முழுமையடையாமல் கிட்டத்தட்ட நெருங்கும் தருவாயில் விட்டுவிட்டார்.

விராட் கோலி படைக்கவிருந்த சாதனைகள்:

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு இருந்தது. தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை கோலி 9230 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 10,000 ரன்களை கடக்க 770 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இந்தநிலையில், விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை கடந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றிருக்கலாம். இது மட்டுமல்லாமல், டெஸ்ட் வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரராகவும் இருந்திருக்கலாம். சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10122 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சாதனையை முறியடுக்க விராட் கோலிக்கு இன்னும் 893 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.

அதிக டெஸ்ட் சதங்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 30 சதங்களை அடித்துள்ளார். இவரது கடைசி சதமானது ஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் வந்தது. இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் கோலி ஆவார். கோலி இன்னும் 5 சதங்கள் அடித்திருந்தால், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிப்பார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 36 சதங்களுடன் 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 34 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வாகும் திராட்சை விதை எண்ணெய்?
முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வாகும் திராட்சை விதை எண்ணெய்?...
பீச்சில் சுற்றுலாப் பயணிகளை விமானத்தின் மூலமாக பறக்கவிட்ட விமானி!
பீச்சில் சுற்றுலாப் பயணிகளை விமானத்தின் மூலமாக பறக்கவிட்ட விமானி!...
இந்தியர்களை தொடர்புகொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள்?
இந்தியர்களை தொடர்புகொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள்?...
இது உண்மையான அனகோண்டாவா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இது உண்மையான அனகோண்டாவா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!...
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்!
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்!...
இன்றுடன் முடிந்த கூவாகம் திருவிழா.. அதன் வரலாறு என்ன..?
இன்றுடன் முடிந்த கூவாகம் திருவிழா.. அதன் வரலாறு என்ன..?...
நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான்- கே.எஸ். ரவிக்குமார்!
நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான்- கே.எஸ். ரவிக்குமார்!...
ரஜினியின் கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?
ரஜினியின் கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?...
அணு ஆயுதப் போர்... இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து டிரம்ப்
அணு ஆயுதப் போர்... இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து டிரம்ப்...
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் - பிரதமர் மோடி அதிரடி
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் - பிரதமர் மோடி அதிரடி...
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக முடியாது! பாகிஸ்தான் குறித்து PM மோடி
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக முடியாது! பாகிஸ்தான் குறித்து PM மோடி...