ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? ரோஹித் சர்மாவா, விராட் கோலியா? – மைக்கேல் வான் தகவல்

Best Batsman : விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி சிறந்த சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இருவரில் யார் சிறந்த ஐபிஎல் பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? ரோஹித் சர்மாவா, விராட் கோலியா? - மைக்கேல் வான் தகவல்

விராட் கோலி - ரோகித் சர்மா

Published: 

16 Mar 2026 16:55 PM

 IST

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2 பெரிய நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி சிறந்த சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இருவரும் கேப்டனாகவும் சரி, பேட்ஸ்மேனாகவும் சரி, பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்திருக்கிறார்கள். இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளி்படுத்தி ஐபிஎல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். இதனையடுத்து இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 8661 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். இவர் இதுவரை 7,046 ரன்கள் குவித்துள்ளார். இந்த 2 பேட்ஸ்மேன்களும் ஐபிஎல் தொடரில் சிறந்த நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களாக தொடர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிக்க : IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்.. ஆதிக்கம் செலுத்தும் கோலி – ஏபிடி கூட்டணி!

யார் சிறந்த பேட்ஸ்மேன்?

இந்த நிலையில் ஐபிஎலில் யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கிரிக்பஸ் என்ற இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஐபிஎல் வரலாற்றில் பல சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கிரிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர் ஆகிய அணைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி ஒருவர் தான். அவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் ன அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் மிக சிறந்தவர் என வான் தெரிவித்துள்ளார். ரஷித் கான் மற்றும் லசித் மலிங்கா போன்றோர் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால் நான் பார்த்ததில் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என்றார்.

இதையும் படிக்க  : IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் இந்த 4 வீரர்களுக்கு கடைசியா? கடந்த சீசனில் செயல்திறன் எப்படி?

யார் சிறந்த கேப்டன்?

மேலும் சிறந்த ஐபிஎல் அணி என்ற கேள்விக்கு பதிளித்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்திலும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். ஆனால் கேப்டன் என்றால் அது எம்.எஸ்.தோனி தான் அனைவரிலும் முன்னிலையில் இருக்கிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். ரோகித் சர்மாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்தாலும், கேப்டன் என்றால் அது தோனி தான் முன்னிலை வகிக்கிறார் என்றார்.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்