Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli Ayodhya Visit: அயோத்தியில் அனுஷ்கா சர்மா – விராட் கோலி.. ராமர், அனுமன் கோயிலில் தரிசனம்!

Ram Mandir visit: விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இன்று, மே 25, 2025 அன்று அயோத்திக்குச் சென்று ராமர் மற்றும் அனுமன் கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்தத் தம்பதியின் அயோத்தி வருகை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவர்கள் ராமர் கோயிலிலும், அனுமன் கோயிலிலும் தரிசனம் செய்து, சிறப்பு பிரசாதங்களைப் பெற்றனர்.

Virat Kohli Ayodhya Visit: அயோத்தியில் அனுஷ்கா சர்மா – விராட் கோலி.. ராமர், அனுமன் கோயிலில் தரிசனம்!
விராட் கோலி - அனுஷ்கா சர்மாImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 25 May 2025 14:50 PM

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் (Anushka Sharma) இணைந்து இன்று அதாவது 2025 மே 25ம் தேதி அயோத்திக்கு சென்று ராமர் மற்றும் அனுமனை பிரார்த்தனை செய்தனர். இருப்பினும், இந்த நேரத்தில் இருவரும் செய்தியாளர்களிடம் இருந்து விலகி, தங்களது நேரத்தை பயன்படுத்தி கொண்டனர். மறுபுறம், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் ரசிகர்களை அனுமதிக்கவில்லை. இந்தநிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம்லாலாவில் தரிசனம்:

ஐபிஎல் 2025ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பிளே ஆஃப் சுற்றுக்குள் அழைத்து சென்ற விராட் கோலி, சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, விராட் கோலி இன்று அதாவது 2025 மே 25ம் தேதி காலை 9 மணியளவில் தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் அயோத்திக்கு சென்றார். முதலில் ராமர் கோயிலுக்கு சென்று ராம்லாலாவை தரிசனம் செய்த விராட் மற்றும் அனுஷ்கா சர்மா, அதன்பிறகு, அனுமன் கோயிலில் தரிசனம் செய்தனர்.

மஹந்த் சஞ்சய் தாஸ் மற்றும் அனுமன்கர்ஹியின் கோயில் தலைமை பூசாரி ஹேமந்த்தாஸ் ஜி மகராஜ் ஆகியோர் தரிசனத்திற்கு பிறகு, ஹனுமன் ஜி மகாராஜின் சிலையை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பிரசாதமாக வழங்கினர். இதன்போது, அறக்கட்டளையின் பிரதிநிதிகள், தம்பதியை கோயில் வளாகத்தில் வரவேற்று, ராம்லாலாவின் சிறப்பு பிரசாதத்தை வழங்கினர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சுமார் 5 நிமிடங்கள் கோயில் வளாகத்தில் நின்று ராம ஜென்மபூமி வளாகத்தை கவனித்து, கோயில் தொடர்பான தகவல்களை ஊழியர்களிடமிருந்து தெரிந்து கொண்டனர். பின்னர், இருவரும் கோயிலின் மகத்துவத்தை போற்றினர்.

அனுமன் கோயிலில் தரிசனம்:

இதன்பின்னர், கோலியும் அனுஷ்கா சர்மாவும் பலத்த பாதுகாப்பின் கீழ் ஹனுமன் கோயிலுக்கு சென்று அனுமனை பிரார்த்தனை செய்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோவில் உள்ள செண்ட்ரம் ஹோட்டலில் தங்கியுள்ளது. அதே ஹோட்டலில் விராட் கோலியும் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக விராட் கோலி தனது மனைவிடன் இணைந்து டேபிள் டென்னிஸ், பிக்கிள் பந்து மற்றும் பிற விளையாட்டுகளை விளையாடினார். தொடர்ந்து, இருவரும் வெளியே சென்று லக்னோ உணவுகளையும் ரசித்து சுவைத்தனர்.

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து 'கேங்ஸ்டர்' கதையில் ரஜினிகாந்த்?
ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து 'கேங்ஸ்டர்' கதையில் ரஜினிகாந்த்?...
EPFO : பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 தகவல்கள்
EPFO : பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 தகவல்கள்...
பட்டோடி முதல் கில் வரை! இளம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் லிஸ்ட்
பட்டோடி முதல் கில் வரை! இளம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் லிஸ்ட்...
நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. நடிகர் சிவராஜ்குமார் பேச்சு!
நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. நடிகர் சிவராஜ்குமார் பேச்சு!...
மழை உள்ளிட்ட காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் Mausam App
மழை உள்ளிட்ட காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் Mausam App...
நீலகிரியில் கேரள சிறுவன் உயிரிழப்பு..! சுற்றுலா தலங்கள் மூடல்..!
நீலகிரியில் கேரள சிறுவன் உயிரிழப்பு..! சுற்றுலா தலங்கள் மூடல்..!...
ரவி மோகன் விவகாரம் : அவதூறுகளுக்கு எதிராக பாடகி கெனிஷா நோட்டிஸ்!
ரவி மோகன் விவகாரம் : அவதூறுகளுக்கு எதிராக பாடகி கெனிஷா நோட்டிஸ்!...
கமல் சாருடன் அந்த காட்சியில் நடிக்கக் கஷ்டப்பட்டேன்- சிலம்பரசன்!
கமல் சாருடன் அந்த காட்சியில் நடிக்கக் கஷ்டப்பட்டேன்- சிலம்பரசன்!...
பாண்டவர் பூமி படத்துல அந்த காட்சியை வைச்சது தப்புனு தோனுச்சு...
பாண்டவர் பூமி படத்துல அந்த காட்சியை வைச்சது தப்புனு தோனுச்சு......
ஊழலை மறைக்கவே டெல்லி பயணம்.. CM ஸ்டாலினை விமர்சித்த தவெக விஜய்!
ஊழலை மறைக்கவே டெல்லி பயணம்.. CM ஸ்டாலினை விமர்சித்த தவெக விஜய்!...
அலுவலக டெஸ்க்கின் கீழே பாம்பு - ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அலுவலக டெஸ்க்கின் கீழே பாம்பு - ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி...