Rising Stars Asia Cup 2025: விரைவில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பு!

India A’s squad for Rising Stars Asia Cup: ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரராக வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கான பதில் விரைவில் கிடைக்கும்.

Rising Stars Asia Cup 2025: விரைவில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பு!

ஜிதேஷ் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி

Published: 

04 Nov 2025 19:29 PM

 IST

வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி முதல் கத்தாரில் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான (Rising Stars Asia Cup) 15 பேர் கொண்ட இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று அதாவது 2025 நவம்பர் 4ம் தேதி அறிவித்தது. இந்த அணியில் ஐபிஎல் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது மட்டுமின்றி, இந்திய அணியின் (Indian Cricket Team) விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா போன்ற பல வளர்ந்து வரும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த போட்டி குறித்தான முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!

வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய வாய்ப்பு:

ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரராக வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சனின் கூற்றுப்படி, வைபவ் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருப்பார் என்று தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில்தான் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் இந்திய அணியுடன் அவருக்குக் கிடைத்த வாய்ப்பு இந்த விஷயத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கலாம். இந்தப் போட்டியில் வைபவ் சூரியவன்ஷி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினால், விரைவில் அவர் சீனியர் அணியில் இணைவதற்கான வழி வகுக்கும்.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணி


ஜிதேஷ் சர்மா (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, நேஹால் வதேரா, பிரியான்ஷ் ஆர்யா, அசுதோஷ் சர்மா, நமன் திர், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ரமன்தீப் சிங், யுத்வீர் சிங் சரக், யாஷ் தாக்கூர், குர்ஜன்பிரீத் சிங், விஜய் குமார் வியாஷ், ஹர்ஷ் துபே, அபிஷேக் போரல், சுய்யாஷ் சர்மா

காத்திருப்பு வீரர்கள்:

குர்னூர் சிங் ப்ரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்

ALSO READ: இந்திய மகளிர் அணியின் அடுத்த போட்டி எப்போது..? யாருடன் விளையாடுகிறது? அட்டவணை இதோ!

இந்தியா ஏ அணி, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுடன் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ளது.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை முழு அட்டவணை

  • 2025 நவம்பர் 14: ஓமன் vs பாகிஸ்தான், இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  • 2025 நவம்பர் 15: வங்கதேசம் vs ஹாங்காங், ஆப்கானிஸ்தான் vs இலங்கை
  • 2025 நவம்பர் 16: ஓமன் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா vs பாகிஸ்தான்
  • 2025 நவம்பர் 17: ஹாங்காங் vs இலங்கை, ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம்
  • 2025 நவம்பர் 18: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா vs ஓமன்
  • 2025 நவம்பர் 19: ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங், வங்கதேசம் vs இலங்கை
  • 2025 நவம்பர் 21: அரையிறுதி: A1 vs B2; B1 vs A2
  • 2025 நவம்பர் 23: இறுதிப் போட்டி