Asia Cup Highest Scores: ஆசியக் கோப்பை டி20 அதிகபட்ச ஸ்கோர்கள்.. டாப் லிஸ்டில் இந்தியா, பாகிஸ்தான்..!
Top 5 Highest Team Scores: ஆசியக் கோப்பை T20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் செய்த ஐந்து அணிகளின் சாதனைகளை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. 2022 ஆம் ஆண்டு துபாயில் இந்தியா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 212/2 ரன்கள் எடுத்தது, இது அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்தியா - பாகிஸ்தான்
டி20 கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது எப்போதுமே மிகப்பெரிய கஷ்டமாகும். டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துகின்றன. இந்தநிலையில், ஆசிய கோப்பை (Asia Cup) டி20 வரலாற்றில், பல முறை பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களை வீழ்த்தி தங்கள் அணியை மிகப்பெரிய ஸ்கோர்களுக்கு எடுத்து சென்றுள்ளனர். அதன்படி, ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket team) ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஆசிய கோப்பை T20 வரலாற்றில் முதல் 5 அதிகபட்ச அணி ஸ்கோர்களை அறிந்து கொள்வோம்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான் – (2022, துபாய்)
இந்திய அணி- 212/2
2022ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியபோது இந்திய அணி ஆசியக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. விராட் கோலி ஆசியக் கோப்பை டி20யில் சதம் அடித்தது மட்டுமின்றி, தனது டி20 முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார் இந்த ஸ்கோர் இதுவரை ஆசியக் கோப்பை டி20யில் அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவானது.
ALSO READ: ஆசியக் கோப்பையில் எந்த அணி எப்போது யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை விவரம் இதோ!
பாகிஸ்தான் vs ஹாங்காங் – (2022, ஷார்ஜா)
பாகிஸ்தான் அணி – 193/2
2022ம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஹாங்காங் பந்துவீச்சாளர்களை துவைத்து எடுத்தனர். அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் எதிரணி அணிக்கு 193 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெற்று பாகிஸ்தான் தனது பலத்தை நிரூபித்தது. இந்த ஸ்கோர் ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.
இந்தியா vs ஹாங்காங் – (2022, துபாய்)
இந்திய அணி- 192/2
இந்தப் பட்டியலில் இந்திய அணி தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரரை, ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தில் உள்ளது. 2022ம் ஆண்டு ஹாங்காங்கிற்கு எதிராகவும் இந்தியா அற்புதமாக விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங் ஹாங்காங் பந்து வீச்சாளர்களை நிலைகுலைய செய்தனர்.
இலங்கை vs வங்கதேசம் – (2022, துபாய்)
இலங்கை அணி – 184/8
2022ம் ஆண்டு துபாயில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 19.2 ஓவர்களில் இலக்கைத் துரத்தி இந்த ஸ்கோரை எட்டியது. இந்த இன்னிங்ஸில், இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
ALSO READ: கவாஸ்கர் முதல் ரோஹித் வரை.. ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய வீரர்கள் பட்டியல்!
வங்கதேசம் vs இலங்கை – (2022, துபாய்)
வங்கதேசம்- 183/7
அதே போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இவ்வளவு பெரிய ஸ்கோர் கூட அவர்களின் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. கடைசி ஓவர்களில் அற்புதமாக பேட்டிங் செய்து இலங்கை இலக்கை தொட்டது. இந்த போட்டி ஆசியக் கோப்பை வரலாற்றில் மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.