South Africa vs New Zealand: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? தடை போடுமா நியூசிலாந்து? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

South Africa vs New Zealand Head to Head: 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை நியூசிலாந்தை விட தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாக இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்க அணி 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இருந்து வருகிறது. முதலில் லீக் ஸ்டேஜ் போட்டிகளில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது.

South Africa vs New Zealand: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? தடை போடுமா நியூசிலாந்து? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

தென்னாப்பிரிக்கா Vs நியூசிலாந்து

Published: 

02 Mar 2026 23:19 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) முதல் அரையிறுதி போட்டி வருகின்ற 2026 மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும். இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் (SA vs NZ) மோதுகின்றன. இந்த பிரம்மாண்டமான போட்டியானது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதேநேரத்தில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தனது முதல் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல நடை பயிலும். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அரையிறுதிப் போட்டியில் யார் முன்னிலை பெறுவார்கள், ஹெட் டூ ஹெட் விவரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விரைவில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி.. மழை பெய்தால் யாருக்கு சாதகம்..? விதிகள் கூறுவது என்ன?

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்:

தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 5வது முறை மோதியுள்ளன. ஒவ்வொரு டி20 உலகக் கோப்பையிலும் தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இதுவரை நடந்த 2007 டி20 உலகக் கோப்பையிலிருந்து 2026 டி20 உலகக் கோப்பை வரை, நியூசிலாந்து ஒருபோதும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது கிடையாது. 2026 டி20 உலகக் கோப்பையில் சமீபத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

டி20யில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

டி20 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையில் தென்னாப்பிரிக்கா அணியே இதுவரை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் 19 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 12 முறையும், நியூசிலாந்து அணி 7 முறையும் வென்றுள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகள் எப்போது தொடக்கம்? இந்திய அணியின் போட்டி விவரம் இதோ!

2026 உலகக் கோப்பையில் யார் சிறப்பாக செயல்படுவார்கள்?

2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை நியூசிலாந்தை விட தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாக இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்க அணி 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இருந்து வருகிறது. முதலில் லீக் ஸ்டேஜ் போட்டிகளில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. பின்னர் சூப்பர் 8 சுற்றில் ஆதிக்கம் செலுத்தி, தங்கள் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

மறுபுறம், நியூசிலாந்து குழு D இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சூப்பர் 8 இல் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2026 டி20 உலகக் கோப்பையில் வெளியேறும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. தற்போது உள்ள அணியின் பலம் மற்றும் புள்ளி விவரங்களின் படி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ