India vs Pakistan: உலகக் கோப்பையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு! இந்த வீரர் இல்லாமல் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!
T20 World Cup 2026: 2026 பிப்ரவரி 15ம் தேதியான இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடியெடுத்து வைத்ததிலிருந்து, அவரது பேட்டிங் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

விராட் கோலி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு (India vs Pakistan) இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை போட்டி (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்திய அணி களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2026 டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளின் சாதனைகளில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், இந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒரு தனித்துவமான சாதனை பட்டியலில் எப்போது ஒரு வீரர் இடம்பெறாமல் இல்லை. இதில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு வீரர் வேறு யாருமல்ல. அந்த வீரர் விராட் கோலி.
ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!
விராட் கோலி இல்லாமல் முதல் முறை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான்:
2026 பிப்ரவரி 15ம் தேதியான இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடியெடுத்து வைத்ததிலிருந்து, அவரது பேட்டிங் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு விராட் கோலி இருந்து வந்துள்ளார்.
இருப்பினும், பல ஆண்டுகளாக விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் பழக்கமாகிவிட்டனர். அதன்படி, கோலி இல்லாமல் இந்தப் போட்டி கொஞ்சம் பார்ப்பதற்கு போர் அடிக்கும். இதுமட்டுமின்றி, கொழும்பின் பிரேமதசா ஸ்டேடியம் மற்றும் விராட் கோலிக்கு மிகப்பெரிய தொடர்பு உள்ளது.
பிரேமதசா மைதானத்தின் நட்சத்திரம் கோலி:
பிரேமதசா மைதானத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 3 போட்டிகள் (2 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20) நடந்துள்ளன. இவற்றில் இரண்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் கோலி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல், ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா தோல்வியடைந்த போட்டி 2004 இல் நடைபெற்றது. அப்போது, கோலி சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இந்த ஸ்டேடியத்தில் 2023 ஆசிய கோப்பையில் கடைசியாக இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடந்தது. அப்போது, விராட் கோலி சதம் அடித்ததன் காரணமாக, இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை:
பிரேமதசா மைதானத்தில் விளையாடிய ஒரே டி20 போட்டி 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உலகக் கோப்பையில் தான். 2012 டி20 உலகக் கோப்பையில் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும், பந்துவீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் போட்டி நேரம் மாற்றமா..? முழு விவரம் இங்கே!
11 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 15ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி:
இந்தியாவும் பாகிஸ்தானும் பிப்ரவரி 15 ஆம் தேதி உலகக் கோப்பை போட்டியில் மோதின. இந்தப் போட்டி சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2015 ஒருநாள் உலகக் கோப்பையின் போது நடந்தது. கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அடிலெய்டில் நடைபெற்ற அந்தப் போட்டியில், விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த காலத்தில் நடந்தது நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ மீண்டும் நிகழுமா என்றால் நடக்காது. ஆனால் கோலி இல்லாமல், இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி நிச்சயமாக முழுமையடைது என்றே சொல்லலாம்.