T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து.. எந்தக் குழுவில் இடம் பெறும்?

Scotland Cricket Team: 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு ஸ்காட்லாந்து தகுதி பெறத் தவறிவிட்டது. ஐரோப்பிய தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து 4வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இப்போது ஸ்காட்லாந்து போட்டியில் விளையாடவுள்ளது. ஐசிசி இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், விதிகளின்படி ஸ்காட்லாந்தின் இடம் உறுதி செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து.. எந்தக் குழுவில் இடம் பெறும்?

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி

Published: 

23 Jan 2026 14:29 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2026) தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் அதற்கு முன், இந்த போட்டியில் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.  ஏனெனில், வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியிருக்கிறது. வங்கதேச அணியின் போட்டிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படாததால் வருத்தமடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், தனது அணியின் பெயரை போட்டியில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. வங்கதேசம் தனது அணியை இந்தியாவுக்கு அனுப்பவில்லை என்றால், ஸ்காட்லாந்துக்கு அதன் இடத்தில் டி20 உலகக் கோப்பையை விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி (ICC) எச்சரித்திருந்தது. அதன்படி, ஸ்காட்லாந்து அணி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடும்.

ALSO READ: கோரிக்கை நிராகரிப்பு! 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!

முன்னதாக ஐ.சி.சி அறிவித்த அட்டவணையின்படி, வங்கதேசம் குரூப் சி-யில் இடம் பெற்றது. வங்கதேசத்தைத் தவிர, இந்தக் குழுவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை அடங்கும். இப்போது வங்கதேச அணி வெளியேற்றப்பட்டதால், ஸ்காட்லாந்து வங்கதேச இடம்பெற்றுள்ள விளையாடும். அட்டவணையின்படி, ஸ்காட்லாந்து தனது முதல் போட்டியை வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக விளையாடும்.

டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்தின் சாதனை என்ன?


முன்னதாக, 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு ஸ்காட்லாந்து தகுதி பெறத் தவறிவிட்டது. ஐரோப்பிய தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து 4வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இப்போது ஸ்காட்லாந்து போட்டியில் விளையாடவுள்ளது. ஐசிசி இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், விதிகளின்படி ஸ்காட்லாந்தின் இடம் உறுதி செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது நடந்தால், ஸ்காட்லாந்து தொடர்ந்து 5வது முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும்.

டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்தின் சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 6 முறை போட்டிகளில் பங்கேற்றுள்ள ஸ்காட்லாந்து, 22 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2021ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ஸ்காட்லாந்து, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து ஒருபோதும் குரூப் கட்டத்தை தவிர, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது கிடையாது. இருப்பினும், ஸ்காட்லாந்து என்பது சாதாரண அணியாக எடுத்துக்கொள்ள முடியாது.

ALSO READ: கட்டாயத்தால் டெஸ்டில் இருந்து கோலி ஓய்வு.. முன்னாள் கிரிக்கெட்டர் அடுக்கிய புகார்!

ஸ்காட்லாந்துக்கு தொடர்ந்து அடிக்கும் லக்:

2009ம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலகக் கோப்பை நடத்தப்பட்டபோதும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நேரத்தில், ஜிம்பாப்வேக்கும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் விரிசல் அடைந்தன. இறுதியில், கிரிக்கெட்டின் நலன்களுக்காக ஜிம்பாப்வே போட்டியில் இருந்து விலகியது. இதன் விளைவாக, ஸ்காட்லாந்து ஒரு இணை அணியாக தகுதி பெற்றது. ஜிம்பாப்வே போட்டியில் பங்கேற்கவில்லை என்றாலும், போட்டி வருவாய்க்கு இழப்பீடு ஏற்படும்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..