IND vs SA 1st Test: 2வது டெஸ்டில் சுப்மன் கில் விளையாடுவாரா..? கவுதம் கம்பீர் கொடுத்த ட்விஸ்ட்!

Shubman Gill: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்ற ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிட்ச்க்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி, பேட்ஸ்மேனின் மனநிலையை சோதிக்கும் என்று கவுதம் கம்பீர் கூறினார்.

IND vs SA 1st Test: 2வது டெஸ்டில் சுப்மன் கில் விளையாடுவாரா..? கவுதம் கம்பீர் கொடுத்த ட்விஸ்ட்!

சுப்மன் கில்

Updated On: 

16 Nov 2025 19:56 PM

 IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டின் (IND vs SA 1st Test) 2வது நாளில் சுப்மன் கில் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வந்து பாதியிலேயே கிளம்பினார். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் கழுத்து வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கொல்கத்தா டெஸ்டில் சுப்மன் கில் (Shubman Gill) இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இந்த டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து, போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். அப்போது, சுப்மன் கில் காயம் குறித்தும் அப்டேட் கொடுத்தார்.

2வது டெஸ்டில் விளையாடுவாரா சுப்மன் கில்..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 22ம் தேதி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் விளையாடுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கவுதம் கம்பீர் என்று கூறினார். இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், “சுப்மன் கில்லின் உடற்தகுதியை இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவக்குழு மதிப்பீடு செய்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இன்னும் சிறு தினங்களுக்குள் பிசியோக்கள் கில்லின் காயம் குறித்து முடிவெடுப்பார்கள். இதன் அடிப்படையில் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்றார்.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் செயல்திறன் எப்படி..?


இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்ற ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிட்ச்க்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி, பேட்ஸ்மேனின் மனநிலையை சோதிக்கும் என்று கூறினார். இதுகுறித்து பேசிய கவுதம் க ம்பீர்,”ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நாங்கள் கேட்டது போலவே இருந்தது. இதில் எந்த குறைபாடுகளும் இல்லை. இது முழுமையாக விளையாடக்கூடியதாக இருந்தது. இதை ஒரு திருப்புமுனை விக்கெட் என்று நாம் கூறினாலும், இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள்தான் இங்கு பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச் என்றால், டெம்பா பவுமா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எப்படி..? எனவே, பிட்ச்சில் எந்த குறையும் இல்லை” என்றார்.