Shreyas Iyer Health Update: ICUவில் இருந்து வெளியே வந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. சிட்னிக்கு செல்லும் குடும்பத்தினர்..!

Shreyas Iyer Injury Update: ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது திரும்புவார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பிசிசிஐ, அணி நிர்வாகம், ஷ்ரேயாஸ் ஐயர், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தனிப்பட்ட ஊழியர்கள் அவரை அவசரமாகத் திரும்ப விரும்பவில்லை என்றும், அவர் முழுமையாக குணமடையும் வரை சிட்னியிலேயே இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Shreyas Iyer Health Update: ICUவில் இருந்து வெளியே வந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. சிட்னிக்கு செல்லும் குடும்பத்தினர்..!

ஷ்ரேயாஸ் ஐயர்

Published: 

27 Oct 2025 21:11 PM

 IST

பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் (Indian Cricket Team) துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அலெக்ஸ் கேரி கேட்சை பிடித்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் ஏற்பட்ட 2 நாட்களுக்கு பிறகு, ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது கீழ் விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும், உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டிருந்தது. சில நண்பர்கள் தற்போது ஐயருடன் இருப்பதாகவும், விசா செயல்முறை முடிந்ததும் ஒரு குடும்ப உறுப்பினர் விரைவில் சிட்னிக்கு வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ALSO READ: விலா எலும்பில் உள் இரத்தப்போக்கால் அவதி.. ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்..!

ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நலம் தற்போது எப்படி..?


சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, ஷ்ரேயாஸின் காயத்தின் நிலையை பிசிசிஐ மருத்துவக் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய அணி மருத்துவர் சிட்னியில் ஷ்ரேயாஸுடன் இருப்பார். அறிக்கையின்படி, ஐயர் ஆபத்தில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலெக்ஸ் கேரியிடமிருந்து கேட்ச் எடுக்கும்போது அவருக்கு உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் உடனடியாக சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு இந்திய அணி மருத்துவர் டாக்டர் ரிஸ்வான் கான் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரை கண்காணித்து வருகின்றார்.

ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது திரும்புவார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பிசிசிஐ, அணி நிர்வாகம், ஷ்ரேயாஸ் ஐயர், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தனிப்பட்ட ஊழியர்கள் அவரை அவசரமாகத் திரும்ப விரும்பவில்லை என்றும், அவர் முழுமையாக குணமடையும் வரை சிட்னியிலேயே இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்கக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், இந்திய டி20 அணி கான்பெர்ராவுக்கு வந்துள்ளது, அங்கு இந்திய அணி வருகின்ற 2025 அக்டோபர் 29ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுவார்கள்.