Ravichandran Ashwin: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!

Ravichandran Ashwin On Retirement: 39 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட் பிறகு திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர், 2025 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Ravichandran Ashwin: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!

ரவிச்சந்திரன் அஸ்வின்

Published: 

09 Oct 2025 20:02 PM

 IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவு முற்றிலும் தனிப்பட்டது என்றும், யாரும் தன்னை வற்புறுத்தப்படவில்லை என்றும் இந்திய அணி (Indian Cricket Team) ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு கௌதம் கம்பீர்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். இதுகுறித்து பேசிய ரவிசந்திரன் அஸ்வின் அணியில் தனக்கு இடமில்லை என்று யாரும் தன்னிடம் சொல்லவில்லை என்றும், தனது ஓய்வை ஒத்திவைக்குமாறு சிலர் ஆலோசனை கொடுத்தும், தான் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

ALSO READ: இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்லும்? ரோஹித் – கோலி பயணம் எப்போது..?

அஸ்வினின் ஓய்வு முடிவு ஏன்..?

39 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட் பிறகு திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர், 2025 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியதாவது, ”நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரோஹித் சர்மா என்னிடம் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கூட இதையே கூறினார். இருப்பினும், நான் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கருடன் இதைப் பற்றி அதிகம் விவாதிக்கவில்லை. ஒரு வீரர் ஓய்வு பெறுவது முற்றிலும் தனிப்பட்ட முடிவு, அது எனக்கும் தனிப்பட்ட முடிவு” என்று தெரிவித்தார்.

இதுநாள் வரை இந்திய அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் கூறி வந்த நிலையில் அஸ்வினின் இந்த கருத்து, இந்திய அணி நிர்வாகமோ அல்லது தேர்வாளர்களோ அவரை ஓய்வு பெற கட்டாயப்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

ALSO READ: விருது விழாவில் தோனியை போல் மிமிக்ரி.. குலுங்கி குலுங்கி சிரித்த ரோஹித் சர்மா.. ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!

ரோஹித் -கோலி குறித்து பேசிய அஸ்வின்:


ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்,  ”விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரு ஜாம்பவான். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அவரும் ரோஹித்தும் பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தால், அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்று நம்புகிறேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் விளையாட வேண்டிய கிரிக்கெட் இன்னும் மீதமுள்ளது. அவர்களின் அனுபவத்தை யாராலும் வாங்க முடியாது. அவர்களின் சேவைகள் இனி தேவையில்லை என்று எந்த பயிற்சியாளரோ அல்லது தேர்வாளரோ கூற முடியாது.” என்று தெரிவித்தார்.

ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
தெருவில் விடப்பட்ட பிறந்த குழந்தை.... இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
மூளை கீழே விழும் விநோத நோய் - 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்
சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..