IND vs AUS T20 Series: காயத்தால் இந்திய அணிக்கு சிக்கல்.. டி20 தொடரில் இருந்து விலகும் நிதிஷ் குமார் ரெட்டி?

Nitish Kumar Reddy Injury: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்தியாவை வழிநடத்துவார். இருப்பினும், தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஏற்பட்ட காயம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகும். பிசிசிஐ அறிவித்தபடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

IND vs AUS T20 Series: காயத்தால் இந்திய அணிக்கு சிக்கல்.. டி20 தொடரில் இருந்து விலகும் நிதிஷ் குமார் ரெட்டி?

நிதிஷ் குமார் ரெட்டி

Published: 

25 Oct 2025 12:16 PM

 IST

சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய ஒருநாள் அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இருப்பினும், இன்று அதாவது 2025 அக்டோபர் 25ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி விளையாடி வருகிறது. இதன்பிறகு, நடைபெறும் டி20 தொடரை வெல்வதன் மூலம் சுற்றுப்பயணத்தை நல்ல முறையில் வெற்றியுடன் முடிக்க சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) விரும்புகிறது. வருகின்ற 2025 அக்டோபர் 29ம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயமடைந்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்தியாவை வழிநடத்துவார். இருப்பினும், தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஏற்பட்ட காயம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகும். பிசிசிஐ அறிவித்தபடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி விளையாடவில்லை.

ALSO READ: இந்திய மகளிர் அணி அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளும்? அட்டவணை இதோ!

நிதிஷ் குமார் ரெட்டிக்கு என்ன ஆனது..?


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு இடது கை எலும்பில் காயம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான தேர்வுக்கு அவர் கிடைக்கவில்லை. அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என தெரிவித்திருந்தார்.

ALSO READ: யாரென தெரிகிறதா?.. ஆஸி.,யில் இந்திய வீரர்களை பார்த்து ஷாக்கான ஓட்டுநர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் சிங் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு, சாம்சன், வாஷிங்டன் சுந்தர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 அட்டவணை

  • 2025 அக்டோபர் 29 – முதல் டி20 (கான்பெர்ரா)
  • 2025 அக்டோபர் 31 – 2வது டி20 (மெல்போர்ன்)
  • 2025 நவம்பர் 2 – 3வது டி20 (ஹோபர்ட்)
  • 2025 நவம்பர் 6 – 4வது டி20 (கோல்ட் கோஸ்ட்)
  • 2025 நவம்பர் 8 – 5வது டி20 (பிரிஸ்பேன்)