Nicholas Pooran Retires: வெறும் 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு.. ஷாக் மேல் ஷாக் கொடுத்த பூரன்..!

Nicholas Pooran Stats: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி டி20 வீரர் நிக்கோலஸ் பூரன், 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பூரன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதிக டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பூரன்.

Nicholas Pooran Retires: வெறும் 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு.. ஷாக் மேல் ஷாக் கொடுத்த பூரன்..!

நிக்கோலஸ் பூரன்

Published: 

10 Jun 2025 12:12 PM

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி வீரருமான நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் (West Indies Cricket) அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் பூரன் ஆவார். மேலும், இந்த வடிவத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரரும் பூரன் ஆவார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட குறிப்பை எழுதி தனது ஓய்வை அறிவித்தார் நிக்கோலஸ் பூரன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 160க்கு மேற்பட்ட வெயிட் பால் போட்டிகளில் விளையாடியுள்ள பூரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு குறித்து பூரன் சொன்னது என்ன..?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு குறித்து பதிவிட்ட பூரன், “ஓய்வு முடிவு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், நான் இதை பற்றி நிறைய யோசித்தேன், மிகவும் ஆழமாக யோசித்தேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்புகள். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். நாங்கள் விரும்பும் இந்த விளையாட்டு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. மெரூன் நிற ஜெர்சியை அணிந்துகொள்வது, தேசிய கீதத்திற்காக நிற்பது மற்றும் நீங்கள் ஸ்டேடியத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அனைத்தையும் வழங்கும். அந்த தருணங்களை வார்த்தைகளில் விவரிப்பது என்பது மிகவும் கடினம். வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டனாக வழிநடத்துவது என்பது நான் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கும் ஒரு பாக்கியம்” என்றார்.

ரசிகர்களே உங்கள் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. நீங்கள் கடினமான காலங்களில் என்னை ஆதரித்தீர்கள், நல்ல தருணங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினீர்கள். இந்த பயணத்தை என்னுடன் நடத்தியதற்காக என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருக்கு நன்றி. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த சர்வதேச அத்தியாயம் முடிவுக்கு வந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீதான எனது காதல் ஒருபோதும் குறையாது. எதிர்காலப் பாதைக்கு வலிமையை தவிர, வேறொன்றையும் நான் விரும்புவதில்லை” என்று தெரிவித்தார்.

பூரனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் 61 ஒருநாள் போட்டிகளிலும் 106 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 39.66 சராசரியுடன் 1,983 ரன்களையும், டி20 போட்டிகளில் 26.15 சராசரியுடன் 2,275 ரன்களையும் எடுத்துள்ளார். பூரன் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களையும், 11 அரைசதஙக்ளை அடித்துள்ளார். அதேநேரத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் 13 அரைசதங்களை அடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நிக்கோலஸ் பூரன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு பூரன் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். கடந்த 2022ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டாது. ஆனால், அதே ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமாக செயல்பட்டதன் காரணமாக, கேப்டன் பதவியை விட்டு விலகினார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான தேர்விலிருந்து தன்னை விலக்கி கொண்டார். மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு பிறகு, ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.

 

Related Stories
National Sports Policy 2025: நடைமுறைக்கு வரும் தேசிய விளையாட்டு கொள்கை.. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அமைச்சரவை..!
India vs England 2nd Test: வெற்றிக்காக 58 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைக்குமா இந்தியா..?
Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!
Ind vs Eng 2nd Test: 2வது டெஸ்டுக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து.. அணியில் ஆர்ச்சருக்கு இடமா?
பயிற்சியில் கடுமையாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்.. 2வது டெஸ்டில் இந்திய அணியில் இடமா..?
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா களம்.. உறுதியாக சொன்ன இந்திய உதவி பயிற்சியாளர்!