MS Dhoni Birthday: தோனியின் அடையாளமாக எண் 7 மாறியது ஏன்? இந்த சுவாரஸ்ய கதை தெரியுமா..?

Dhoni's Number 7 Mystery: எம்.எஸ். தோனியின் 44வது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அவரது ஜெர்சி எண் 7-ன் முக்கியத்துவம், 'தல' என்ற அடைமொழி, மற்றும் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அடைந்த வெற்றிகள் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. தோனியின் பிறந்தநாள், அவரது விருப்பமான எண், மற்றும் ரசிகர்கள் அவரை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

MS Dhoni Birthday: தோனியின் அடையாளமாக எண் 7 மாறியது ஏன்? இந்த சுவாரஸ்ய கதை தெரியுமா..?

எம்.எஸ்.தோனி

Published: 

07 Jul 2025 07:07 AM

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டனும், இந்திய அணிக்கு 3 ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி (MS Dhoni) எனப்படும் எம்.எஸ். தோனியின் இன்று அதாவது 2027 ஜூலை 7ம் தேதி தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில், ரசிகர்கள் தோனியை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் ஒரு ஐகானாகவும் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அதன்படி, 2025 ஜூலை 7ம் தேதியான இன்று சமூக ஊடகங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் “தல ஃபார் எ ரீசன்” ட்ரெண்ட்கள் மூலம் தோனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மத்தியில், ஒரு விஷயம் மிகவும் மதிக்கப்படும் விஷயம் அவருக்குப் பிடித்த எண் 7 என்பதுதான்.

தோனியின் ஜெர்சியில் எப்போதும் நிலைத்திருக்கும் 7 என்ற எண், ரசிகர்களின் இதயங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து, இந்த எண்ணின் ரகசியம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

7 எண்ணல்ல அடையாளம்:

தோனியே பலமுறை எண் 7 தனது மனதிற்கு மிக நெருக்கமானது என்று தெரிவித்துள்ளார். அதன் முக்கியமான காரணங்களில் ஒன்று. மகேந்திர சிங் தோனி ஆங்கில வருட காலண்டரின்படி,  7 மாதமான ஜூலை 7ம் தேதி ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். அதனால்தான் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே இந்த எண்ணை தனது ஜெர்சிக்கு பின்னாடி பயன்படுத்தி வருகின்றார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2025 சீசனிலும் தோனி தனது ஜெர்சியில் 7ம் எண்ணை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேர்காணலின் போது, ​​மகேந்திர சிங் தோனி இந்த எண்ணை ஏன் இவ்வளவு விரும்புகிறார் என்று கூறினார். 1981ம் ஆண்டு பிறந்தேன். இது 8-1=7 க்கு சமம். மேலும், 1981ம் ஆண்டு ஆண்டின் ஏழாவது மாதம் 7 ஆம் தேதி பிறந்தேன். இதனால், 7 என்ற எண் என்னுடன் தொடர்ந்து பயணிக்கிறது என்றார். 7 என்ற எண் இனி தோனியின் அடையாளம் மட்டுமல்ல, ரசிகர்களையும் அவரையும் இணைக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பாக மாறியுள்ளது.

‘தல ஃபார் எ ரீசன்’ என்ற வார்த்தை ட்ரெண்ட்:<

/h3>
‘தல ஃபார் எ ரீசன்’ என்று கேட்டதும், பலரின் மனதில் அதன் அர்த்தம் என்ன, தோனிக்கு அவரது ரசிகர்கள் ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள் என்ற கேள்வி எழும்.

உண்மையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தோனியை ‘தல’ என்று அழைத்தனர், படிப்படியாக இந்த பெயர் ஒரு உணர்ச்சியாக மாறியது. ‘தல’ என்பது ஒரு தமிழ் வார்த்தை, அதாவது “தலைவர்” என்று பொருள்.

தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனி இந்தியாவுக்காக இதுவரை 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10,773 ரன்களும், டி20 போட்டிகளில் 1617 ரன்களும் எடுத்துள்ளார்.

தோனியின் தலைமையில், இந்தியா 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, 2011 ஆம் ஆண்டு இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் வென்றது.