MS Dhoni Achievements: பத்மஸ்ரீ முதல் ஹால் ஆஃப் ஃபேம் வரை.. எம்.எஸ்.தோனி வென்ற விருதுகள் பட்டியல்..!

Mahendra Singh Dhoni Awards: ஜூலை 7, 2025 அன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற வெற்றிகளை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல்வேறு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது சாதனைகள் மற்றும் விருதுகள் பற்றி இங்கே விரிவாக காண்போம்.

MS Dhoni Achievements: பத்மஸ்ரீ முதல் ஹால் ஆஃப் ஃபேம் வரை.. எம்.எஸ்.தோனி வென்ற விருதுகள் பட்டியல்..!

எம்.எஸ்.தோனி

Published: 

07 Jul 2025 11:02 AM

 IST

உலகில் மிகவும் முக்கியமான கிரிக்கெட் வீரர்களின் ஒருவரான மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) 2025 ஜூலை 7ம் தேதியான இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களின் ஒருவரான எம்.எஸ்.தோனி 1981ம் ஆண்டு பீகார் மாநிலம் (தற்போது ஜார்க்கண்ட்) ராஞ்சியில் பிறந்தார். எம்.எஸ்.தோனி கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது வரை ஐபிஎல் (IPL) போட்டிகளில் விளையாடி வருகிறார். எம்.எஸ். தோனி ஒரு ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தார், அவரது தந்தையின் பெயர் பான் சிங் மற்றும் தாயின் பெயர் தேவ்கி தேவி. கோல்கீப்பராக கால்பந்து விளையாட தொடங்கி, பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகு, அவர் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அன்று தொடங்கிய கிரிக்கெட் பயணம் (Cricket) இன்று வரை தொடர்கிறது.

2007 ஆம் ஆண்டு அவரது தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது, எம்.எஸ்.தோனியின் வெற்றிப்பயணம் தொடங்கியது. இதன் பிறகு, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணிக்காக வென்று கொடுத்தார். இந்தநிலையில், எம்.எஸ்.தோனி வென்ற விருதுகளை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

எம்.எஸ். தோனி வென்ற சிறந்த விருதுகளின் பட்டியல்:

  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா- 2007
  • ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் – 2008-09
  • பத்மஸ்ரீ – 2009
  • ஐ.சி.சி கிரிக்கெட்டின் ஸ்பிரிட் விருது – 2011
  • கௌரவ லெப்டினன்ட் கர்னல் – 2011
  • காஸ்ட்ரோல் இந்தியன் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் – 2011
  • ஐசிசி மக்கள் தேர்வு விருது (2013)
  • பிசிசிஐ அங்கீகார சிறப்பு விருதுகள் – 2017
  • பத்ம பூஷண் – 2018
  • ஐசிசி ஆண்கள் பத்தாண்டு ஒருநாள் அணி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) – 2011-2020
  • ஐசிசி ஆண்கள் டி20 பத்தாண்டு அணி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) – 2011-2020
  • ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம் – 2025

தேசிய சிவில் கௌரவங்கள் :

பத்மஸ்ரீ (2009) :

2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. இதற்கு காரணமாக இருந்த மகேந்திர சிங் தோனிக்கு கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது சிவில் கௌரவ விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

பத்ம பூஷண் (2018) :

இந்திய விளையாட்டுக்கு மகேந்திர சிங் தோனி செய்த குறிப்பிடத்தக்க சேவைகளுக்காக, தோனிக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் விருது கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்