IndvsSA : வலைபயிற்சியின்போது பிரபல வீரர் காயம் – நாளை களமிறங்குவாரா? அதிர்ச்சி தகவல்

T20 World Cup : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் முகமது சிராஜ் காயமடைந்ததாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

IndvsSA : வலைபயிற்சியின்போது பிரபல வீரர் காயம் - நாளை களமிறங்குவாரா? அதிர்ச்சி தகவல்

முகமது சிராஜ் முழங்கால் காயம்

Published: 

21 Feb 2026 21:00 PM

 IST

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) லீக் போட்டிகளில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்று சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22, 2026 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அபிஷேக் சர்மா லீக் சுற்றில் 3 போட்டிககளிலும் டக் அவுட்டான நிலையில் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வலைபயிற்சியில் பிரபல வீரர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சூப்பர் 8 போட்டிக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில் தற்போது வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வலை பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து, நேராக சிராஜின் இடது முழங்காலில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : T20 WC 2026: ‘சூப்பர் 8’ சுற்றில் இன்று நியூசி., – பாக்., பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலமும், பலவீனமும்..

இதனால் முகமது சிராஜ் வலியால் அவதிப்பட்ட நிலையில் உடனடியாக பயிற்சி நிறுத்தப்பட்டு அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மைதானத்தில் இருந்து தடுமாறிய படி வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய போட்டியின் போது சிராஜ் காயமடைந்திருப்பது அணியினரிடம் கவலையை அதிகரித்திருக்கிறது. இதனால் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை ஏற்கனவே பலரும் காயங்கள் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக தலா ஒரு போட்டியை தவறவிட்டனர். மேலும் வாஷிங்டன் சுந்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடருக்கு முன்பாக ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பேசிக்கொள்ளும் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்… கைகுலுக்காமல் இருப்பது இதற்காக தான் – இங்கிலாந்து வீரரின் பேச்சால் சர்ச்சை

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்ற சிராஜ் 3 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தினார். இருப்பினும் அடுத்து நடைபெற்ற போட்டிகளில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் சிராஜால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

Related Stories
IndvsSA : நான் ஆட்டத்தை மாற்றப்போவதில்லை… விமர்சனங்களுக்கு பதிலளித்த அபிஷேக் சர்மா
ரோகித் சர்மா – தோனி ரன் வேட்டை: தென்னாப்பிரிக்காவை காலி செய்த இந்தியா – 2007 உலகக்கோப்பை நியாபகம் இருக்கா?
India vs South Africa: வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் இந்தியாவின் X Factor வீரர்கள்!!
T20 World Cup Super-8: பாக்., – நியூசி., போட்டி.. இலங்கையில் மோசமான வானிலை.. போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?..
T20 WC 2026: ‘சூப்பர் 8’ சுற்றில் இன்று நியூசி., – பாக்., பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலமும், பலவீனமும்..
பேசிக்கொள்ளும் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்… கைகுலுக்காமல் இருப்பது இதற்காக தான் – இங்கிலாந்து வீரரின் பேச்சால் சர்ச்சை
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!