Chennai Super Kings: ராஜஸ்தானில் ராஜநடை போதும்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?

Sanju Samson Leaving Rajasthan Royals: ஐபிஎல் 2025 முடிந்த பின்னரும், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனாலேயே அவர் சிஎஸ்கேவில் இணையப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

Chennai Super Kings: ராஜஸ்தானில் ராஜநடை போதும்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?

எம்.எஸ்.தோனி - சஞ்சு சாம்சன்

Published: 

16 Jun 2025 20:30 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) முடிந்த பிறகும், அதனை பற்றிய பேச்சுகள் இன்னும் முடிந்த பாடியில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என்ற செய்திகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சஞ்சு சாம்சனுக்கும் (Sanju Samson) ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. கிடைத்த தகவலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸுடனான சஞ்சு சாம்சனின் வர்த்தகம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும், அடுத்த சீசனில் இருந்து அவர் சிஎஸ்கேவின் மஞ்சள் ஜெர்சியில் காணப்படலாம் என்றும் கூறுகின்றன. ஆனால், இது உண்மையா என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

சிஎஸ்கே அணியும் சஞ்சு சாம்சனும்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்கிறார் என்று சொல்லாமல் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, மகேந்திர சிங் தோனியின் வாரிசாக சஞ்சு சாம்சன் சென்னைக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது. இந்த பரபரப்புக்கு பின்னால் சஞ்சு சாம்சன் தனது மனைவி சாருலதா சாம்சனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு, அதில் 2 வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்தார்.

மகேந்திர சிங் தோனியின் வாரிசா சஞ்சு..?

அதில், ‘நகர வேண்டிய நேரம் இது’ என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் சஞ்சு சாம்சனும் அவரது மனைவியும் சாலையில் மஞ்சள் கோட்டை கடப்பது போன்று இடம்பெற்றிருந்தது. மேலும், புகைப்படத்திற்கு கீழ் நடிகர் சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ தமிழ் படத்தின் பாடலும் ஒலித்தது.

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைவாரா?

கடந்த 2013 ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து, தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் தடை செய்யப்பட்டபோது, டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சஞ்சு விளையாடினார். 2018ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் தடைக்கு பிறகு, வந்தபோது சஞ்சு சாம்சன் இணைந்தார். தொடர்ந்து, இது தவிர, 2021 ஆம் ஆண்டு இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதே நேரத்தில், சஞ்சு சாம்சனின் ஐபிஎல் வர்த்தகம் குறித்து பேசுகையில், அது தற்போது சமூக ஊடகங்களில் மட்டுமே பேசப்பட்டு வருகிறது. மேலும் எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமோ அல்லது உரிமையாளரோ அதை உறுதிப்படுத்தவில்லை. பிசிசிஐ அல்லது ஐபிஎல் நிறுவனத்திடமிருந்தும் அத்தகைய அறிக்கை எதுவும் வரவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இது தற்போது வெறும் வதந்தி மட்டுமே.