IPL 2026: அக்ஸர் படேலின் திட்டம் பலே..! ராஜஸ்தானின் வெற்றி பயணத்தை முடித்துவிட்ட டெல்லி..!
RR vs DC Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 1ம் தேதி சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 பந்துகளை மீதம் வைத்து இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.

Dc Win Rr
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 1ம் தேதி சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 பந்துகளை மீதம் வைத்து இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 226 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வரலாறு படைத்தது. இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி அணி வெற்றிகரமாக விரட்டிப் பிடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
ALSO READ: ஐபிஎல்லில் முக்கிய விதி.. இந்த வீரரால் இன்று விளையாடாமல் போகலாம்..!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் குவித்தது. இதுமட்டுமின்றி, ஐபிஎல் 2026-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷுதோஷ் சர்மா மற்றும் நிதிஷ் ராணா ஆகியோரும் தங்களது சிறிது நேர அதிரடி ஆட்டத்தின் மூலம் டெல்லியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.
டெல்லியின் கேப்பிட்டல்ஸ் அணியின் மிகப்பெரிய ரன் சேஸ்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 225 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரன் சேஸிங்கிற்கு அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்தனர். நிசங்கா 33 பந்துகளில் 62 ரன்களும், ராகுல் 40 பந்துகளில் 75 ரன்களும் எடுத்தனர்.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் துரத்திப் பிடித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முந்தைய அவர்களின் அதிகபட்ச ரன் எண்ணிக்கை 210 ஆகும். அதை இந்த அணி ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக எட்டியிருந்தனர் .
- 226 ரன்கள் – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- 210 ரன்கள் – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ALSO READ: எல்.எஸ்.ஜியிலும் கிடைக்காத வாய்ப்பு.. மாநில கிரிக்கெட்டுக்கு செல்லும் அர்ஜூன் டெண்டுல்கர்!
கே.எல். ராகுல் வரலாறு படைப்பு:
இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் 40 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அதிக முறை 50-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்தார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ராகுல் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுப்பது இது எட்டாவது முறையாகும். அவருக்கு முன்பு, ஏபி டி வில்லியர்ஸும் எட்டு முறை இவ்வாறு செய்துள்ளார்.