Team India: இந்திய அணிக்கு அழைப்பு..? 15 வயதில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi: இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு பிசிசிஐ ஒரு பெரிய வாய்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. அதன்படி, வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

Team India: இந்திய அணிக்கு அழைப்பு..? 15 வயதில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி!

வைபவ் சூர்யவன்ஷி

Published: 

14 Apr 2026 14:57 PM

 IST

கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட்டில் அடிக்கடி கேட்கப்படும் பெயர்களில் ஒன்று வைபவ் சூர்யவன்ஷி. அதிரடிக்கு பெயர்பெற்ற வைபவ் சூர்யவன்ஷி எப்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிக்கு எதிரான 2026 ஏப்ரல் 14ம் தேதியான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் இப்போது அவருக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) அடுத்த டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. வருகின்ற 2026 ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வைபவ் சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: அறிமுக போட்டி.. முதல் ஓவரில் 3 விக்கெட்.. ஐபிஎல்லை அதிர வைத்த இளம் வீரர்.. யார் இந்த பிரஃபுல் ஹிஞ்சின்?

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு பிசிசிஐ ஒரு பெரிய வாய்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. அதன்படி, வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வட்டாரங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு வீரருடன் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இளம் கிரிக்கெட் வீரர்

இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படும் மிக இளம் வயது கிரிக்கெட் வீரராக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் மிக இளம் வயது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெறுவார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பலர் வியக்கின்றனர். அவருக்குப் பின்னால், அவரது அதிரடி ஆட்டமும், பல சாதனைகளும் குவிந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடந்த ஒரு வருடமாக வைபவ் சூர்யவன்ஷி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஐபிஎல் 2026-ல் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங் மூலம் பும்ரா, போல்ட் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்களைத் திணறடித்துள்ளார். ஐபிஎல் 2026-ல் ஆரஞ்சு கேப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

ALSO READ: இரண்டாவது வெற்றியின்மூலம் SRH முன்னிலை.. தத்தளிக்கும் KKR.. முதலிடத்தில் யார்?

ஐசிசி விதிமுறை என்ன சொல்கிறது?

வைபவ் சூர்யவன்ஷி தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிகளின்படி, ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளில் விளையாட குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். தற்போது, ​​வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. இது, வைபவ் சூர்யவன்ஷி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல உலக சாதனைகளைப் படைப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்