IPL 2026: ராசியாக அமைந்ததா டாஸ்..? முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு

RCB vs GT Toss Update: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 24ம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கும். 

IPL 2026: ராசியாக அமைந்ததா டாஸ்..? முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு

Rcb Vs Gt Toss

Updated On: 

24 Apr 2026 19:49 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 24ம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கும். ஆர்சிபி 6 போட்டிகளில் 4 வெற்றிகள் மூலம் 8 புள்ளிகளைப் பெற்று, தற்போது புள்ளி அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 6 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்று செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

ALSO READ: ஆர்சிபியை ஆட்டம் காண வைக்குமா ஜிடி..? நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்?

ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2026: நேருக்கு நேர் சாதனை:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதல் பதிவுகள் சமமாக உள்ளன. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன; இதில் ஆர்சிபி 3 போட்டிகளிலும், ஜிடி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இவ்விரு அணிகளுக்கும் இடையே மீண்டும் ஒரு விறுவிறுப்பான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளின் முழு விவரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜோஷ் ஹேசில்வுட், நுவான் துஷாரா, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, ரசிக் தார், புவனேஷ்வர் குமார், ஜோர்டான் காக்ஸ், சுயாஷ் சிங் ஷர்மா, வெங்கடேஷ் டி. கனிஷ்க் சவுகான், அபிநந்தன் சிங், மங்கேஷ் யாதவ், பில் சால்ட், சாத்விக் தேஸ்வால், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா.

ஆர்சிபி பிளேயிங் லெவன்:

விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தார்

ஜிடி பிளேயிங் லெவன்:

சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ஜேசன் ஹோல்டர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மனவ் சுதார், காகிசோ ரபாடா, முகமது சிராஜ்

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஷாருக் கான், அனுஜ் ராவத், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா, டாம் பான்டன், கிளென் பிலிப்ஸ், ஜேசன் ஹோல்டர், நிஷாந்த் சிந்து, ராகுல் தெவாடியா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஜெயந்த் காந்த், ஷாரு கான், அர்ஷாத், அர்ஷாத், அர்ஷாத் முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..