IPL 2026: பிளேஆஃப்களுக்கு தகுதிபெற எத்தனை புள்ளிகள் தேவை..? ஆர்சிபி தகுதிபெற்றதா?
IPL 2026 Playoffs Race: இந்தியன் பிரீமியர் லீக்கின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, 16 புள்ளிகள் தகுதி பெறுவதற்கான ஒரு பாதுகாப்பான அளவுகோலாகக் கருதப்படுகிறது. 18-20 புள்ளிகளைப் பெறும் ஒரு அணி பொதுவாக முதல் இரண்டு இடங்களுக்குள் ஒன்றைப் பிடித்துவிடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல் 2026 (IPL 2026) புள்ளிகள் அட்டவணையில் ஒவ்வொரு போட்டியின் முடிவுக்கு பிறகு, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி மட்டுமே ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணியாக, 7 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மற்ற அணிகளின் செயல்பாடு இன்னும் சிறப்பானதாக மாறவில்லை. அந்தவகையில், பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற ஒரு அணிக்கு எத்தனை புள்ளிகள் தேவை என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: காயத்தால் அடிவாங்கும் சிஎஸ்கே.. ஐபிஎல் 2026ல் வெளியேறிய கலீல் அகமது..!
பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற இன்னும் எத்தனை புள்ளிகள் தேவை?
இந்தியன் பிரீமியர் லீக்கின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, 16 புள்ளிகள் தகுதி பெறுவதற்கான ஒரு பாதுகாப்பான அளவுகோலாகக் கருதப்படுகிறது. 18-20 புள்ளிகளைப் பெறும் ஒரு அணி பொதுவாக முதல் இரண்டு இடங்களுக்குள் ஒன்றைப் பிடித்துவிடும். இருப்பினும், ஒரு அணி 16 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்றிருந்தால், அதன் தகுதி அதன் நிகர ரன் ரேட்டை பொறுத்து மாறுப்படும்.
ஐபிஎல் 2025ல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 19 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களைப் பிடித்தன. 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பொதுவாக, ஒரு அணி 16 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது உறுதி செய்யப்படுவதில்லை. மேலும், அத்தகைய அணிகள் மற்ற போட்டிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டும்.
ஐபிஎல் 2026 சமீபத்திய புள்ளி அட்டவணை
சமீபத்திய ஐபிஎல் 2026 புள்ளி அட்டவணையின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 5 போட்டிகளில் விளையாடி, தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதன் பொருள், மீதமுள்ள 9 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்தால், அவற்றின் பிளேஆஃப் இடங்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
ALSO READ: ஆர்சிபிக்கு எதிரான போட்டி.. ‘இட்லி தோசை’ பாடலை ஒலிபரப்பிய டிஜே.. பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே புகார்!
4 போட்டிகளுக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் 7 புள்ளிகளையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் தற்போது பிளேஆஃப் தகுதிப் புள்ளிக்குள் உள்ளன. டெல்லி கேப்பிட்டல்ஸ் 5வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 6வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 8வது இடத்திலும் உள்ளன. 4 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்திலும், 10வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது.