IPL 2026: ஃப்ளிக் அடிச்ச இஷான் கிஷன்.. ஜென்சன் கை வைச்சதும் கேட்ச் ஆன அதிசயம்! PBKS அணிக்கு 220 ரன்கள் இலக்கு!
PBKS vs SRH: 3வதாக களமிறங்கிய இஷான் கிஷன் மற்றொரு பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் தனது அற்புதமான ஃபீல்டிங் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் திகைக்க வைத்த ஒரு கேட்சைப் பிடித்தார்.

மார்கோ ஜென்சன்
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நியூ சண்டிகரில் மோதி வருகிறது. இந்த போட்டியில் தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தை சிறப்பாக ஆரம்பித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 8.1 ஓவர்களில் 120 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 3வதாக களமிறங்கிய இஷான் கிஷன் மற்றொரு பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் தனது அற்புதமான ஃபீல்டிங் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் திகைக்க வைத்த ஒரு கேட்சைப் பிடித்தார். பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கூட அவரது கேட்சைக் கண்டு வியந்தார்.
ALSO READ: பஞ்சாப்பிற்கு பந்தயம் கட்டுமா ஹைதராபாத்.. போட்டி யாருக்கு சாதகம்?
மார்கோ ஜான்சன் சிறப்பான கேட்ச்:
ONE HANDED STUNNER 🥶🔥
Marco Jansen pulls off an insane one handed catch 😳💥
That’s pure magic in the field 👏🏏#SRHvsPBKS #PBKSvsSRH
pic.twitter.com/KKWKKDvHLN— Simple Boy (@MrMagnetick) April 11, 2026
ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸின் 14வது ஓவரில், அர்ஷ்தீப்பின் கடைசிப் பந்தில் இஷான் கிஷன் லெக் சைடில் தட்டிவிட்ட பந்து பவுண்டரியைத் தாண்டிச் சென்றுவிடும் போலத் தோன்றியது. ஆனால், உயரமான மார்கோ ஜென்சன் முதலில் பந்தை நோக்கி ஓடிவந்து, ஒரு கையால் அசத்தலான கேட்சைப் பிடித்தார். அவர் பிடித்த அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
219 ரன்கள் குவிப்பு:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாட இருக்கிறது.
ALSO READ: பும்ரா, ஹேசில்வுட் சறுக்கல்.. உலகின் டாப் பவுலர்களை தடுமாற செய்யும் வைபவ் சூர்யவன்ஷி..
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
பஞ்சாப் கிங்ஸ்
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் விஷக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா.