IPL 2026: தோல்வியே இல்லாத பஞ்சாப்.. வெற்றிக்காக போராடும் மும்பை.. இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?

MI vs PBKS Match Prediction: ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக மும்பை அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார்.

IPL 2026: தோல்வியே இல்லாத பஞ்சாப்.. வெற்றிக்காக போராடும் மும்பை.. இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?

மும்பை - பஞ்சாப்

Published: 

16 Apr 2026 16:06 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 16ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே ஒரு விறுவிறுப்பான மோதல் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை தோல்வியடையாமல் உள்ளது. மேலும், 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியின் ஒரு போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி, 4 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவது மிக மிக முக்கியம்.

ALSO READ: வான்கடே ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ்.. வாட்டி வதைக்குமா மும்பை இந்தியன்ஸ்?

ரோஹித் சர்மா இல்லாமல் விளையாடும் மும்பை இந்தியன்ஸ்:

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக மும்பை அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார். இந்தப் போட்டிக்கு முன்பே ரோஹித் சர்மா தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுகிறார். இதையடுத்து, ஆடும் லெவனில் அவருக்குப் பதிலாக யார் இடம்பெறுவார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. குயின்டன் டி காக்கை தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்குவதே மும்பையின் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் அப்படிச் செய்தால், டிரென்ட் போல்ட்டை அணியிலிருந்து நீக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, இளம் இந்திய வீரர்களில் யாரேனும் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்கலாம்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதுவரை மும்பை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 முறையும், பஞ்சாப் அணி மும்பை அணியை 17 முறையும் தோற்கடித்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 5 போட்டிகளில், பஞ்சாப் கிங்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

போட்டி கணிப்பு:

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தாலும் கணிப்பின்படி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே இன்று வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்தப் போட்டி 50-50 வெற்றி வாய்ப்புள்ள ஒன்றாகும்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

மும்பை இந்தியன்ஸ் ப்ளேயிங் லெவன்

ரியான் ரிக்கில்டன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் தீர், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜஸ்பிரிட் பும்ரா

இம்பாக்ட் வீரர்: அஸ்வினி குமார்

ALSO READ: விராட்டிடம் ஆரஞ்சு கேப் தஞ்சம்.. பர்ப்பிள் யாரிடம் உள்ளது..? டாப் 5 லிஸ்ட்!

பஞ்சாப் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்

பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் விஷாக் மற்றும் அர்ஷ்தீப் சிங்

இம்பாக்ட் வீரர் – யுஸ்வேந்திர சாஹல்

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி