IPL 2026: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதும் குஜராத் – ராஜஸ்தான்.. பிட்ச் நிலவரம் எப்படி..?

IPL 2026 GT vs RR: குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கக்கூடும். கடந்த 2025 ஐபிஎல் சீசனில், வைபவ் சூர்யவன்ஷி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் குஜராத்துக்கு ஒரு சவாலாக அமையலாம்.

IPL 2026: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதும் குஜராத் - ராஜஸ்தான்.. பிட்ச் நிலவரம் எப்படி..?

குஜராத் Vs ராஜஸ்தான்

Published: 

04 Apr 2026 16:45 PM

 IST

ஐபிஎல் 2026 தொடரில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 4ம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயும், இரண்டாவது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிகளுக்கு இடையேயும் நடைபெற உள்ளது. இங்கு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியைப் பற்றி சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், குஜராத் அணி இந்த சீசனின் தனது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

ALSO READ: 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வி.. மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே!

அதன்படி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கக்கூடும். கடந்த 2025 ஐபிஎல் சீசனில், வைபவ் சூர்யவன்ஷி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் குஜராத்துக்கு ஒரு சவாலாக அமையலாம். குஜராத்துடன் ஒப்பிடும்போது, ​ ராஜஸ்தான் அணி வலுவாகத் தெரிகிறது. இந்த சீசனில், புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் ராஜஸ்தான் அணி மிகவும் பலத்துடன் காணப்படுகிறது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமானதாகும். இங்கு அதிக ரன்களை எளிதாக எடுக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ரன்களை அதிகளவில் விட்டுகொடுக்கவும் வாய்ப்புகள் உண்டு. கடந்த 2025 ஐபிஎல் சீசனில், இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 215 ஆக இருந்தது. பனி ஒரு பிரச்சனையாக இருக்காது என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்யலாம். முதலில் ஒரு பெரிய ஸ்கோரை எடுத்தால், அதை எளிதாக தற்காத்துகொள்ள முடியும்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதலில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகள் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், குஜராத் இதுவரை 6 முறை ராஜஸ்தானை தோற்கடித்துள்ளது. அதேசமயம், ராஜஸ்தான் குஜராத்தை இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ் ஆடக்கூடிய லெவன்:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ஷாருக் கான் , ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா/ஜேசன் ஹோல்டர், அசோக் ஷர்மா, முகமது சிராஜ்.

ALSO READ: மீண்டும் மீண்டும் அதே சிக்கல்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 24 லட்சம் அபராதம்.. காரணம் இதுதான்!

இம்பாக்ட் பிளேயர் – பிரசித் கிருஷ்ணா

ராஜஸ்தான் ராயல்ஸின் ஆடக்கூடிய லெவன்:

வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், டொனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, நந்த்ரே பர்கர்

இம்பாக்ட் பிளேயர் – பிரிஜேஷ் சர்மா

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.