IPL 2026: சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன்.. ஜடேஜா இனி ராஜஸ்தான் பக்கம்.. சிஎஸ்கே அறிவிப்பு

IPL Retentions 2026: ஐபிஎல் மின் ஏலத்திற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை இன்று அதாவது 2025 நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தநிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரனுக்கு ஈடாக சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்வதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது.

IPL 2026: சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன்.. ஜடேஜா இனி ராஜஸ்தான் பக்கம்.. சிஎஸ்கே அறிவிப்பு

சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா

Updated On: 

15 Nov 2025 12:00 PM

 IST

2026 ஐபிஎல் (IPL 2026) மினி ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் (Sanju Samson), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜாவும், சாம் கர்ரனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் மாறியுள்ளனர். இது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்:

 

இதன்மூலம், ஐபிஎல் 2026 சீசனில் சென்னை அணிக்காக சஞ்சு சாம்சனும், ராஜஸ்தான் அணிக்காக ரவீந்திர ஜடேஜாவும் விளையாடவுள்ளனர்.

ALSO READ: ஐபிஎல் 2026ன் முதல் வர்த்தக ஒப்பந்தம்.. ஷர்துல் தாக்கூரை இணைத்து கொண்ட மும்பை இந்தியன்ஸ்!

ஜடேஜாவை மிஸ் செய்யும் சிஎஸ்கே ரசிகர்கள்:

கடந்த 2012ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா விளையாடி வருகிறார். மேலும், 8 போட்டிகளுக்கும் ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்காக தலைமை தாங்கியுள்ளார். ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக முக்கிய பங்கு வகித்து 2018, 2021 மற்றும் 2023 என ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். இதில், 2023ம் இறுதிப்போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றதற்கு ரவீந்திர ஜடேஜாதான் மிக முக்கிய காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ரவீந்திர ஜடேஜா இதுவரை 186 போட்டிகளில் விளையாடி 2,198 ரன்களையும், 143 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஜடேஜா 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டி குழந்தை சாம் கர்ரன்:

சாம் கர்ரன் 2021ம் ஆண்டு ஐபிஎல் வென்ற சிஎஸ்கே அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சாம் கர்ரன் ஐபிஎல் 2020, 2021 மற்றும் 2025ம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சென்னை அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ள கர்ரன், 356 ரன்கள் மற்றும் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா நிபந்தனை.. கேப்டன் பதவியை வழங்குமா நிர்வாகம்..?

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சனின் செயல்திறன்:

ஐபிஎல்லில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவரான சாம்சன், 177 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சாம்சன் ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 285 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் சாம்சன் ஆவார். ஐபிஎல் 2021க்கு முன்பு அவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல்லில் ராஜஸ்தானின் மிகவும் வெற்றிகரமான கேப்டன் சாம்சன் ஆவார். இவரது தலைமையில், அந்த அணி ஐபிஎல் 2022ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

Related Stories